සිංහල පරිවර්තනය සමග).தேசிய பாதுகாப்பின் புதிய அத்தியாயம்: அணுசக்தி அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்கும் வரலாற்று தீர்மானம்.
தேசிய அணுச்சக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புகுழுவை நிறுவுவதற்காற அமைச்சரவை அணுமதி என்பது இலங்கையில்லஅணுமின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான இறுதி அணுமதியோ அல்லது அத்தகைய திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத் படுகின்றது என்பதற்காக அறிவிப்போ அல்ல.
அறிவியல், தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால அபிவிருத்தியை ஒருங்கிணைக்கும் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் தொலை நோக்குப் பார்வை!
மருத்துவம், விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்க மூலப்பொருட்களின் பாதுகாப்பான பயன்பாட்டையும், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இது உறுதி செய்கிறது.
1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில், நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது வீதிகள் அமைப்பது, கட்டடங்களைக் கட்டுவது, பாலங்களை நிர்மாணிப்பது, பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிடுவது ஆகியவற்றுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட முடியாது. மாறாக, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய ஆபத்துகளை இன்றே அடையாளம் கண்டு, அவற்றைத் தடுப்பதற்கான அறிவியல் அடிப்படையிலான கட்டமைப்புகளை உருவாக்குவதும் உண்மையான தேசிய அபிவிருத்தியின் முக்கியமான அடையாளமாகும்.
அந்த வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2026 நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துள்ள தேசிய அணுச்சக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவை (National Nuclear Security Coordination Committee) நிறுவுவதற்கான தீர்மானம், இலங்கையின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை வலுப்படுத்தும் தொலைநோக்குடைய நடவடிக்கையாகக் கருதப்பபடுகின்றது.
இந்தத் தீர்மானத்தை வெறுமனே இன்னுமொரு அமைச்சரவை அங்கீகாரமாகப் எவறாவது பார்ப்பார்களானால்! அவ்வாறான பார்வை, அதன் உண்மையான முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். ஏனெனில், அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அமைச்சின் நிர்வாகப் பொறுப்பு மாத்திரமல்ல. அது தேசிய இறையாண்மை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேசப் பொறுப்புக்கூறல் மற்றும் எதிர்காலப் பொருளாதார வாய்ப்புகள் ஆகிய அனைத்துடனும் நேரடியாகத் தொடர்புபட்ட விடயமாகும்.
பாதுகாப்பு என்பது அச்சுறுத்தல் ஏற்பட்ட பின்னர் தேடிச் செல்லும் நடவடிக்கையல்ல; அச்சுறுத்தல் உருவாகும் முன்னரே அதனைத் தடுக்கும் அறிவியல் ஆற்றலாகும்! விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இந்த ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரின் அறிவிப்புகளின்படி, இதன் நோக்கங்களும் கட்டமைப்பும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இக்குழுவின் தலைவராக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் செயற்படுவதுடன், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் செயலாளராகப் பணியாற்றுவார். பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் ஏனைய தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் அங்கம் வகிப்பர். இதன் மூலம் வெவ்வேறு அரச நிறுவனங்களுக்கிடையில் காணப்படக்கூடிய ஒருங்கிணைப்புக் குறைபாடுகளை நீக்கி, ஒரே தேசியக் கட்டமைப்பின் கீழ் கொள்கைத் தீர்மானங்கள், அச்சுறுத்தல் மதிப்பீடுகள் மற்றும் அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
இங்கு பொதுமக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம், அணுசக்தி பாதுகாப்பு என்பது அணுகுண்டுகள் அல்லது அணு ஆயுதங்கள் தொடர்பான விடயம் மாத்திரமல்ல என்பதாகும். மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கதிரியக்க மூலப்பொருட்கள், எக்ஸ்-கதிர் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், விவசாய ஆராய்ச்சிகள், உணவுப் பாதுகாப்பு, தொழிற்சாலைகளின் தரப் பரிசோதனைகள் மற்றும் விஞ்ஞான ஆய்வகங்கள் எனப் பல துறைகளில் கதிரியக்கப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய பொருட்கள் முறையான கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் கையாளப்படும்போது மனிதகுலத்திற்குப் பெரும் நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் அவை திருடப்பட்டாலோ, சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டாலோ, தவறான நபர்களின் கைகளில் சென்றாலோ அல்லது உரிய பாதுகாப்பின்றிப் பயன்படுத்தப்பட்டாலோ பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, அவற்றின் பயன்பாட்டைத் தடை செய்வதல்ல இந்தத் திட்டத்தின் நோக்கம்; மாறாக, மனித நலனுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த அறிவியல் வளங்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் காரணமாக மாறிவிடாமல் பாதுகாப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
இலங்கை இந்து சமுத்திரத்தின் முக்கியமான சர்வதேசக் கடல்வழிப் பாதையில் அமைந்துள்ளது. கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற துறைமுகங்களும் சர்வதேச விமான நிலையங்களும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சர்வதேச வர்த்தகத்திற்கும் முக்கியமான நுழைவாயில்களாக உள்ளன.
இந்தப் புவியியல் அமைவிடம் இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதுடன், சர்வதேசக் கடத்தல் மற்றும் சட்டவிரோதப் போக்குவரத்து போன்ற பாதுகாப்பு சவால்களையும் உருவாக்கக்கூடியது. குறிப்பாக, அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களைச் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவருதல், நாட்டின் ஊடாக வேறு நாடுகளுக்குக் கடத்துதல் அல்லது அவற்றைத் தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் போன்ற அபாயங்களை கடந்தகாலஅரசாங்கங்களை போன்று அலட்சியப்படுத்தி விட முடியாது.
இதனை எதிர்கொள்வதற்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுங்கத்துறை, பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனித்தனியாகச் செயற்படுவது மாத்திரம் போதுமானதல்ல. அவற்றுக்கிடையில் தகவல் பரிமாற்றம், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை அடையாளம் காணுதல், உடனடி எச்சரிக்கை விடுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த பதிலளிப்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வழிகாட்டுதல்களும் இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறையையே வலியுறுத்துகின்றன. குறிப்பாக, எல்லைப் பகுதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் கதிர்வீச்சைக் கண்டறியும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை அபாய மதிப்பீட்டின் அடிப்படையில் பயன்படுத்துவதும், சந்தேகத்திற்குரிய பொருட்கள் அடையாளம் காணப்பட்டால் விரைவாகச் செயற்படுவதும் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளாகும்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம், இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு வெறுமனே வழக்கமான சோதனை நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தையும் தகவல் பகுப்பாய்வையும் அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு அணுகுமுறையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உருவாகின்றது.
இந்தத் தீர்மானத்தின் மற்றுமொரு முக்கியமான நன்மை பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப் பொருட்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகக் கையாளப்படுவதை உறுதிப்படுத்தும் அவசியம் முக்கியத்துவம் பெறுகின்றது.
கதிரியக்கப் பொருட்கள் தவறான முறையில் கையாளப்படும்போது அல்லது பாதுகாப்புக் குறைபாடுகளால் கசிவு ஏற்படும்போது மனித உடல் நலம் மட்டுமன்றி, நீர், நிலம், உணவுச் சங்கிலி மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படலாம். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிப்பதற்குப் பெரும் பொருளாதாரச் செலவுகளும் நீண்டகால சிகிச்சை மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் தேவைப்படலாம்.
எனவே, ஆபத்து ஏற்பட்ட பின்னர் அதற்கான தீர்வுகளைத் தேடுவதைவிட, ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதே அறிவார்ந்த அரச நிர்வாகத்தின் அடையாளமாகும்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் கதிரியக்கப் பொருட்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் அல்லது விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புத் தரப்பினரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒருங்கிணைந்து விரைவாகச் செயற்படுவதற்கான நிறுவன ரீதியான அடித்தளம் வலுப்பெறும். இதன் இறுதி நன்மை அரசாங்கத்திற்கோ குறிப்பிட்ட அமைச்சுக்கோ மாத்திரம் உரியதல்ல; இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் உரியதாகும்.
மேலும், இன்றைய உலகில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதன் உள்நாட்டு உற்பத்தி அல்லது ஏற்றுமதி வருமானத்தைக் கொண்டு மாத்திரம் மதிப்பிட முடியாது. அந்த நாடு சர்வதேச பாதுகாப்புத் தரநிலைகளை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றது, அதன் நிறுவனக் கட்டமைப்புகள் எவ்வளவு நம்பகமானவை, வெளிநாட்டு முதலீடுகளுக்கான சூழல் எவ்வளவு பாதுகாப்பானது என்பனவும் முக்கியமான அளவுகோல்களாக மாறியுள்ளன.
குறிப்பாக, சர்வதேச அணுசக்தி முகவரகம் (IAEA) போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக தேசியப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது இலங்கையின் சர்வதேச நம்பகத்தன்மையை உயர்த்த உதவும்.
இதன் மூலம் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு, நிபுணத்துவப் பயிற்சிகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பொருத்தமான முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழல் மேம்படலாம். அதேநேரம், இத்தகைய குழுவை நிறுவியிருப்பது மாத்திரமே வெளிநாட்டு முதலீடுகளையோ, நிதியுதவிகளையோ உறுதிப்படுத்திவிடாது. அதனை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பத் திறன், சட்ட அமுலாக்கம் மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு ஆகியனவும் அவசியமாகும்.
அத்தோடு மிக முக்கியமாகா இந்தத் தீர்மானத்தின் நீண்டகால முக்கியத்துவத்தை ஆராயும்போது, இலங்கையின் எதிர்கால மின்சக்தித் திட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2025–2044 காலப்பகுதிக்கான நீண்டகால மின்சார உற்பத்தித் திட்டங்களின் பின்னணியில், எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று சக்தி மூலங்கள் குறித்தும் அணுசக்தியின் சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட வேண்டிய தேவை உள்ளது.
உலகின் பல நாடுகள் அணுசக்தியை குறைந்த கரியமில வாயு வெளியீட்டைக் கொண்ட மின்சார உற்பத்தி மூலமாகப் பயன்படுத்துகின்றன. அதேவேளை, அணுமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது என்பது மிகுந்த தொழில்நுட்ப அறிவு, பெரும் முதலீடு, சுயாதீனமான ஒழுங்குபடுத்தல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நீண்டகாலப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கோரும் செயற்பாடாகும்.
இலங்கையும் எதிர்காலத்தில் அணுசக்தியை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய விரும்பினால், அதற்கு முன்னதாகவே வலுவான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பை உருவாக்குவது புத்திசாலித்தனமான அணுகுமுறையாக கணிக்கப்படுகின்றது.
இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவுவதற்கான அமைச்சரவை அனுமதி என்பது இலங்கையில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான இறுதி அனுமதியோ அல்லது அத்தகைய திட்டம் உடனடியாக நடைமுறை படுத்தப்படுகின்றது என்பதற்கான அறிவிப்போ அல்ல.
மாறாக, எதிர்காலத்தில் அத்தகைய தொழில்நுட்பத் தெரிவுகள் பரிசீலிக்கப்படும் பட்சத்தில், அவற்றைச் சர்வதேசத் தரங்களுக்கு அமைவாகப் பாதுகாப்பாகக் கையாள்வதற்குத் தேவையான நிறுவன ரீதியான தயார் நிலையை உருவாக்குவதற்கான முக்கியமான படியாகும். இதுவே ஒரு தொலை நோக்குடைய அரசாங்கத்தின் சிந்தனைக்கும், அன்றாட அரசியல் இலாபங்களை மாத்திரம் கணக்கிடும் அரசியல் அணுகுமுறைக்கும் இடையிலான வேறுபாடாகும்.
ஆகவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசியல் கண்ணோட்டத்தில் மாத்திரம் அணுகி, அதன் பின்னணியில் உள்ள தேசிய நலன்களையும் நடைமுறைப் பயன்களையும் ஆராயாமல் விமர்சிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவாது.
எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமை நிச்சயமாக உண்டு. அரசாங்கத்தின் திட்டங்களில் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். செலவினங்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டும். திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும். அதுவே ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம்.
ஆனால், நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களைக்கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் நிராகரிப்பது பொறுப்பான எதிர்க்கட்சி அரசியலாக இருக்க முடியாது.
ஒரு அரசாங்கத்தின் உண்மையான திறனை அதன் அரசியல் உரைகளைக் கொண்டு மாத்திரம் மதிப்பிட முடியாது. நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான நிறுவனங்களை உருவாக்குகின்றதா? சர்வதேசத் தரங்களுக்கு ஏற்ப நிர்வாகத்தை நவீனப்படுத்துகின்றதா? மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றதா? எதிர்காலத் தலைமுறைகளுக்கான வாய்ப்புகளைத் திறக்கின்றதா? என்பனவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிட வேண்டும்.
அந்த வகையில், தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவுவதற்கான தீர்மானம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அறிவியல் சார்ந்த நிர்வாக அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
எனவே, இலங்கையின் எதிர்காலம் என்பது கடந்தகால அரசியல் தோல்விகளைப் பற்றிப் பேசுவதில் மாத்திரம் கட்டமைக்கப்பட வேண்டியதல்ல. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், தேசியப் பாதுகாப்பு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய நிர்வாகக் கலாசாரத்தை உருவாக்குவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது.
1948ஆம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் பயணத்தில், எதிர்கால உலகின் சவால்களை முன்கூட்டியே கணித்து அதற்கான நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியமான மாற்றமாகும். அந்த மாற்றத்திற்கான ஒரு முக்கியமான நகர்வாகவே அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த அமைச்சரவைத் தீர்மானத்தைப் பார்க்க வேண்டும்.
ஏனெனில், ஒரு நாடு வளர்ச்சியடைந்த பின்னர் தனது மக்களைப் பாதுகாப்பதில்லை; தனது மக்களைப் பாதுகாப்பதற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே உண்மையான வளர்ச்சியை அடைகின்றது.
இன்று உருவாக்கப்படும் இந்தப் பாதுகாப்புக் கட்டமைப்பு நாளைய இலங்கையின் அறிவியல் முன்னேற்றத்திற்கும் பொருளாதார நம்பகத்தன்மைக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் வலுவான அடித்தளமாக அமைய வேண்டும். இதுவே அரசியல் தலைமுறைகளைத் தாண்டி நாட்டுக்குச் சொந்தமான தேசியப் பொறுப்பாகவும் உள்ளது.
அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன் பத்திரிகைக்காக,
25-11-2026
ජාතික ආරක්ෂාව පිළිබඳ නව පරිච්ඡේදයක්: න්යෂ්ටික තර්ජන වැළැක්වීමට විසඳුමක්!
ජාතික න්යෂ්ටික ආරක්ෂණ සම්බන්ධීකරණ කමිටුව පිහිටුවීමට කැබිනට් අනුමැතිය ශ්රී ලංකාවේ න්යෂ්ටික බලාගාරයක් පිහිටුවීමේ අවසන් අනුමැතිය හෝ එවැනි ව්යාපෘතියක් වහා ක්රියාත්මක කරන බවට නිවේදනයක් නොවේ.
විද්යාව, තාක්ෂණය, ජාතික ආරක්ෂාව සහ අනාගත සංවර්ධනය ඒකාබද්ධ කරන අනුර කුමාර දිසානායක රජයේ දූරදර්ශී දැක්ම!
එය වෛද්ය විද්යාව, කෘෂිකර්මාන්තය සහ කර්මාන්ත සඳහා භාවිතා කරන විකිරණශීලී ද්රව්ය ආරක්ෂිතව භාවිතා කිරීම මෙන්ම මහජනතාව සහ පරිසරය ආරක්ෂා කිරීම සහතික කරයි.
++++++++++++++++++++
1948 නිදහස ලැබීමෙන් පසු ශ්රී ලංකාවේ දේශපාලන ඉතිහාසය තුළ, රටේ අනාගත ආරක්ෂාව සහ විද්යාවේ හා තාක්ෂණයේ දියුණුව සැලකිල්ලට ගනිමින් සමගාමීව ක්රියාත්මක කරන මුල පිරීම් ඉතා වැදගත් වේ.
රටක සංවර්ධනය යනු මාර්ග හැදීම, ගොඩනැගිලි ඉදිකිරීම, පාලම් ඉදිකිරීම, ආර්ථික වර්ධනය පිළිබඳ සංඛ්යා ලේඛන ප්රකාශයට පත් කිරීම පමණක් සීමා කළ නොහැක. ඒ වෙනුවට අනාගතයේ ඇති විය හැකි අවදානම් කල්තියා හඳුනාගෙන ඒවා වැළැක්වීම සඳහා විද්යාව පදනම් කරගත් ව්යුහයන් නිර්මාණය කිරීම ද සැබෑ ජාතික සංවර්ධනයේ වැදගත් ලක්ෂණයකි.
එම සන්දර්භය තුළ, ජාතික න්යෂ්ටික ආරක්ෂක සම්බන්ධීකරණ කමිටුව පිහිටුවීම සඳහා 2026 නොවැම්බර් 17 වන දින පැවති කැබිනට් රැස්වීමේදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය විසින් ගනු ලැබූ තීරණය ශ්රී ලංකාවේ අනාගත ආරක්ෂාව සහ තාක්ෂණික ධාරිතාව ශක්තිමත් කරන ඉදිරි දැක්මක් ලෙස සැලකේ.
මෙම තීරණය හුදෙක් තවත් කැබිනට් අනුමැතියක් ලෙස සලකන්නේ නම්, එවැනි මතයක් එහි සැබෑ වැදගත්කම අවතක්සේරු කරනු ඇත. මක්නිසාද යත් න්යෂ්ටික බලශක්ති හා විකිරණශීලී ද්රව්ය සම්බන්ධ ආරක්ෂාව හුදෙක් යම් අමාත්යාංශයක පරිපාලන වගකීමක් නොවන බැවිනි. එය ජාතික ස්වෛරීභාවය, මහජන ජීවිතය ආරක්ෂා කිරීම, පාරිසරික ආරක්ෂාව, ජාත්යන්තර වගවීම සහ අනාගත ආර්ථික අවස්ථා සමඟ සෘජුව සම්බන්ධ වූ කාරණයකි.
ආරක්ෂාව යනු තර්ජනයක් ඇති වූ පසු ගන්නා ක්රියාමාර්ගයක් නොවේ; එය තර්ජනය මතුවීමට පෙර එය වැළැක්වීමේ විද්යාත්මක හැකියාවයි. විද්යා හා තාක්ෂණ අමාත්ය මහාචාර්ය ක්රිෂාන්ත අබේසේකර මහතා ඉදිරිපත් කළ යෝජනාවට අනුව විද්යා හා තාක්ෂණ අමාත්යාංශය යටතේ මෙම සම්බන්ධීකරණ කමිටුව පිහිටුවීමට අමාත්ය මණ්ඩල අනුමැතිය හිමිව තිබේ.
මීට අමතරව රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ සහ කැබිනට් ප්රකාශක අමාත්ය නලින්ද ජයතිස්ස මහතාගේ නිවේදනවලට අනුව එහි අරමුණු සහ ව්යුහය පැහැදිලි කර ඇත.
විද්යා හා තාක්ෂණ අමාත්යාංශයේ ලේකම්වරයා මෙම කමිටුවේ ප්රධානියා ලෙස කටයුතු කරන අතර ශ්රී ලංකා පරමාණුක බලශක්ති නියාමන සභාවේ අධ්යක්ෂ ජනරාල්වරයා එහි ලේකම්වරයා ලෙස කටයුතු කරනු ඇත. ආරක්ෂක, නීතිය හා සාමය සහ අනෙකුත් අදාළ ක්ෂේත්රවල රාජ්ය ආයතනවල නියෝජිතයින් ද සාමාජිකයින් වනු ඇත. මේ හරහා විවිධ රාජ්ය ආයතන අතර පැවතිය හැකි සම්බන්ධීකරණයේ අඩුවක් නැති කර ගැනීමටත්, ප්රතිපත්ති තීරණ, තර්ජන තක්සේරු කිරීම් සහ හදිසි පියවරයන් එකම ජාතික රාමුවක් යටතේ ඉදිරියට ගෙන යාමටත් හැකි වේ.
මෙහිදී මහජනතාව ප්රථමයෙන් අවබෝධ කරගත යුතු වැදගත් කරුණ නම් න්යෂ්ටික ආරක්ෂාව යනු පරමාණු බෝම්බ හෝ න්යෂ්ටික අවිවලට පමණක් අදාළ කරුණක් නොවන බවයි. විකිරණශීලී ද්රව්ය රෝහල්වල පිළිකා ප්රතිකාර සඳහා භාවිතා කරන විකිරණශීලී ද්රව්ය, X-කිරණ සහ වෛද්ය පරීක්ෂණ සම්බන්ධ තාක්ෂණයන්, කෘෂිකාර්මික පර්යේෂණ, ආහාර සුරක්ෂිතතාව, කර්මාන්තවල තත්ත්ව පරීක්ෂණ සහ විද්යාත්මක රසායනාගාර ඇතුළු බොහෝ ක්ෂේත්රවල භාවිතා වේ.
එවැනි ද්රව්ය නිසි පාලනයකින් සහ ආරක්ෂිතව හසුරුවන විට, ඒවා මනුෂ්ය වර්ගයාට විශාල ප්රතිලාභයක් ලබා දෙයි. කෙසේ වෙතත්, ඒවා සොරකම් කළහොත්, නීති විරෝධී ලෙස ප්රවාහනය කළහොත්, වැරදි පුද්ගලයින් අතට පත් වුවහොත් හෝ ප්රමාණවත් ආරක්ෂාවක් නොමැතිව භාවිතා කළහොත් ඒවා බරපතල ප්රතිවිපාක ඇති කළ හැකිය.
එබැවින්, මෙම ව්යාපෘතියේ අරමුණ ඔවුන්ගේ භාවිතය තහනම් කිරීම නොවේ; ඒ වෙනුවට එහි මූලික පරමාර්ථය වන්නේ මානව සුභසාධනය සඳහා භාවිතා කරන මෙම විද්යාත්මක සම්පත් කිසිදු ආකාරයක තර්ජනයකට හේතුවක් නොවන බව සහතික කිරීමයි.
ශ්රී ලංකාව ඉන්දියන් සාගරයේ වැදගත් ජාත්යන්තර සමුද්ර මාර්ගයක් ඔස්සේ පිහිටා ඇත. කොළඹ, හම්බන්තොට සහ ත්රිකුණාමලය වැනි වරායන් මෙන්ම ජාත්යන්තර ගුවන් තොටුපළවල් රටේ ආර්ථිකයට සහ ජාත්යන්තර වෙළඳාමට වැදගත් දොරටුවක් ලෙස සේවය කරයි.
මෙම භූගෝලීය පිහිටීම ශ්රී ලංකාවට ආර්ථික අවස්ථා සපයන නමුත් ජාත්යන්තර ජාවාරම් සහ නීති විරෝධී ජාවාරම් වැනි ආරක්ෂක අභියෝග ද නිර්මාණය කළ හැකිය. විශේෂයෙන්ම න්යෂ්ටික හා විකිරණශීලී ද්රව්ය නීතිවිරෝධී ලෙස රට තුළට ගෙන ඒම, ඒවා රට හරහා වෙනත් ජාතීන්ට ජාවාරම් කිරීම හෝ ද්වේෂසහගත අරමුණු සඳහා භාවිතා කිරීමේ අවදානම පසුගිය රජයන් විසින් සිදු කර ඇති පරිදි නොසලකා හැරිය නොහැකිය.
මෙයට පිළියම් යෙදීම සඳහා වරාය, ගුවන් තොටුපළ, රේගු අධිකාරීන්, ආරක්ෂක ආයතන, පොලිසිය සහ තාක්ෂණ සමාගම් වෙන වෙනම ක්රියාත්මක වීම ප්රමාණවත් නොවේ. ඔවුන් අතර තොරතුරු හුවමාරු කර ගැනීම, සැක කටයුතු ක්රියාකාරකම් හඳුනා ගැනීම, ක්ෂණික අනතුරු ඇඟවීම් නිකුත් කිරීම සහ සම්බන්ධීකරණ ප්රතිචාර ක්රියාමාර්ග අත්යවශ්ය වේ.
ජාත්යන්තර පරමාණුක බලශක්ති ඒජන්සියේ (IAEA) මාර්ගෝපදේශ ද එවැනි ඒකාබද්ධ ප්රවේශයක් අවධාරණය කරයි. විශේෂයෙන්ම, අවදානම් තක්සේරුවේ පදනම මත දේශසීමා ප්රදේශ, වරාය සහ ගුවන් තොටුපලවල විකිරණ හඳුනාගැනීම සඳහා තාක්ෂණික යටිතල පහසුකම් භාවිතා කිරීම සහ සැක කටයුතු අයිතම හඳුනාගැනීමේදී කඩිනම් ක්රියාමාර්ග ගැනීම වැදගත් ආරක්ෂක පියවරයන් වේ.
මෙම ව්යාපෘතිය ක්රියාත්මක කිරීමත් සමඟ ශ්රී ලංකාවේ දේශසීමා ආරක්ෂාව සාමාන්ය පරීක්ෂණ මෙහෙයුම්වලට පමණක් සීමා නොවී නවීන විද්යාත්මක තාක්ෂණය සහ තොරතුරු විශ්ලේෂණය මත පදනම් වූ ආරක්ෂක ප්රවේශයක් කරා ගමන් කිරීමට අවස්ථාව ලැබේ.
මෙම තීරණයේ තවත් වැදගත් වාසියක් මහජන සෞඛ්යයට සෘජුවම සම්බන්ධ වේ. පිළිකා ප්රතිකාර මධ්යස්ථානවල, රෝහල්වල, කර්මාන්තශාලාවල සහ පර්යේෂණ ආයතනවල භාවිත කරන විකිරණශීලී ද්රව්ය නිසි ආරක්ෂිත ක්රියා පටිපාටිවලට අනුකූලව හසුරුවන බව සහතික කිරීමේ අවශ්යතාව වැදගත් වේ.
විකිරණශීලී ද්රව්ය වැරදි ලෙස හසුරුවන විට හෝ ආරක්ෂක දුර්වලතා හේතුවෙන් කාන්දුවීම් සිදු වූ විට, මිනිස් සෞඛ්යයට පමණක් නොව ජලය, භූමිය, ආහාර දාමය සහ පරිසරයට ද බලපෑම් ඇති විය හැකිය. මෙයින් ඇති විය හැකි හානියට පිළියම් යෙදීමට සැලකිය යුතු ආර්ථික පිරිවැයක් මෙන්ම දිගු කාලීන ප්රතිකාර සහ පාරිසරික ප්රතිසංස්කරණ ක්රියාමාර්ග අවශ්ය විය හැකිය.
එබැවින් අනතුරක් සිදු වූ පසු විසඳුම් සෙවීමට වඩා එවැනි අනතුරක් ඇතිවීමේ හැකියාව කල්තියා හඳුනාගෙන එය වළක්වා ගැනීම බුද්ධිමත් රාජ්ය පරිපාලනයේ ලක්ෂණයයි.
මෙම සම්බන්ධීකරණ කමිටුව හරහා විකිරණශීලී ද්රව්ය සම්බන්ධ තර්ජන හෝ අනතුරු සිදුවන අවස්ථාවන්හිදී ආරක්ෂක ආයතනවලට සහ තාක්ෂණික ආයතනවලට කඩිනමින් සහ සම්බන්ධීකරණයෙන් ක්රියා කිරීමට ආයතනික පදනම ශක්තිමත් කෙරේ. මෙහි අවසාන ප්රතිලාභය රජයට හෝ කිසියම් අමාත්යාංශයකට පමණක් සීමා වූවක් නොවේ. එය සිංහල, දෙමළ, මුස්ලිම් සහ වෙනත් අය ඇතුළු ශ්රී ලංකාවේ ජීවත් වන සියලුම ජනතාවට අයත් වේ.
එපමණක් නොව, වර්තමාන ලෝකය තුළ රටක ආර්ථික සංවර්ධනය එහි දේශීය නිෂ්පාදනයෙන් හෝ අපනයන ආදායමෙන් පමණක් තක්සේරු කළ නොහැක. එම රට ජාත්යන්තර ආරක්ෂක ප්රමිතීන් කෙතරම් දුරට පිළිපදින්නේද, එහි ආයතනික ව්යුහයන් කෙතරම් විශ්වාසදායකද සහ විදේශ ආයෝජන සඳහා පරිසරය කෙතරම් සුරක්ෂිතද යන්න ද වැදගත් මිණුම් සලකුණු බවට පත්ව ඇත.
විශේෂයෙන්ම ජාත්යන්තර පරමාණුක බලශක්ති නියෝජිතායතනය (IAEA) වැනි සංවිධානවල මාර්ගෝපදේශයන්ට අනුකූලව ජාතික ආරක්ෂාව සහ නියාමන රාමු ශක්තිමත් කිරීම ශ්රී ලංකාවේ ජාත්යන්තර විශ්වසනීයත්වය ඉහළ නැංවීමට උපකාරී වනු ඇත.
මේ හරහා ජාත්යන්තර තාක්ෂණික සහයෝගීතාවය, විශේෂඥ පුහුණුව, තාක්ෂණික සහාය සහ සුදුසු ආයෝජන අවස්ථා සඳහා ප්රවේශය සඳහා පරිසරය වැඩිදියුණු විය හැකිය. ඒ අතරම, එවැනි කණ්ඩායමක් පිහිටුවීමෙන් පමණක් විදේශ ආයෝජන හෝ මූල්ය ආධාර සහතික වන්නේ නැත. එය ක්රියාත්මක කිරීමේදී විනිවිදභාවය, තාක්ෂණික නිපුණතාවය, නීතිමය බලාත්මක කිරීම සහ අඛණ්ඩ ඇගයීම ද අත්යවශ්ය වේ.
මීට අමතරව, සහ වඩාත්ම වැදගත් දෙය නම්, මෙම තීරණයේ දිගුකාලීන වැදගත්කම පරීක්ෂා කිරීමේදී, ශ්රී ලංකාවේ අනාගත බල සැලසුම් ද සැලකිල්ලට ගත යුතුය. 2025-2044 කාලපරිච්ඡේදය සඳහා දීර්ඝ කාලීන විදුලි ජනන සැලසුම් සන්දර්භය තුළ, අනාගත විදුලි ඉල්ලුම සපුරාලීම සඳහා විකල්ප බලශක්ති ප්රභවයන් මෙන්ම න්යෂ්ටික බලයේ විභව භූමිකාව ද විමසා බැලීමේ අවශ්යතාවයක් පවතී.
ලෝකයේ බොහෝ රටවල් අඩු කාබන්ඩයොක්සයිඩ් විමෝචනයක් සහිත විදුලි ජනන ප්රභවයක් ලෙස න්යෂ්ටික බලය භාවිතා කරයි. ඒ අතරම, න්යෂ්ටික බලාගාර පිහිටුවීම පුළුල් තාක්ෂණික විශේෂඥ දැනුමක්, සැලකිය යුතු ආයෝජනයක්, ස්වාධීන නියාමනයක්, ආරක්ෂක ක්රියා පටිපාටි සහ දිගු කාලීන වගකීමක් අවශ්ය කරන ක්රියාකාරකමක් වේ.
අනාගතයේදී විදුලිය නිෂ්පාදනය සඳහා න්යෂ්ටික බලය භාවිත කිරීමේ හැකියාව ගවේෂණය කිරීමට ශ්රී ලංකාව ද අපේක්ෂා කරන්නේ නම්, පළමුව ශක්තිමත් ආරක්ෂිත සහ නියාමන රාමුවක් ස්ථාපිත කිරීම නුවණට හුරු ප්රවේශයක් ලෙස සැලකේ.
මෙහිදී එක් කරුණක් පැහැදිලි කළ යුතුය. ජාතික න්යෂ්ටික ආරක්ෂණ සම්බන්ධීකරණ කමිටුවක් පිහිටුවීමට කැබිනට් අනුමැතිය ශ්රී ලංකාවේ න්යෂ්ටික බලාගාරයක් පිහිටුවීමේ අවසන් අනුමැතිය හෝ එවැනි ව්යාපෘතියක් වහා ක්රියාත්මක කරන බවට කරන ප්රකාශයක් නොවේ.
ඒ වෙනුවට, අනාගතයේදී සලකා බැලිය යුතු නම්, ජාත්යන්තර ප්රමිතීන්ට අනුකූලව එවැනි තාක්ෂණික විකල්ප ආරක්ෂිතව කළමනාකරණය කිරීමට අවශ්ය ආයතනික සූදානම නිර්මාණය කිරීම සඳහා එය වැදගත් පියවරකි. ඉදිරි දැක්මක් ඇති ආණ්ඩුවක චින්තනය සහ ක්ෂණික දේශපාලන වාසි පමණක් ගණනය කරන දේශපාලන ප්රවේශය අතර වෙනස මෙයයි.
එබැවින්, ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුවේ සෑම ක්රියාවක්ම තනිකරම දේශපාලන දෘෂ්ටිකෝණයකින් විවේචනය කිරීම, ඒ පිටුපස ඇති ජාතික අවශ්යතා සහ ප්රායෝගික ප්රතිලාභ ගැන සොයා බැලීමකින් තොරව රටේ ඉදිරි ගමනට ඉවහල් නොවේ.
කෙසේ වෙතත්, දේශපාලන ද්වේශසහගතව රටේ ආරක්ෂාව, විද්යාත්මක සංවර්ධනය, තාක්ෂණික ප්රගතිය සහ අනාගත පරපුරේ සුබසාධනය වෙනුවෙන් ගන්නා තීරණ පවා ප්රතික්ෂේප කිරීම වගකිවයුතු විපක්ෂ දේශපාලනය ලෙස සැලකිය නොහැකිය.
ආණ්ඩුවක සැබෑ හැකියාව එහි දේශපාලන කතාවලින් පමණක් මනින්න බැහැ. එය රටේ අනාගතයට අවශ්ය ආයතන ගොඩනඟනවාද, ජාත්යන්තර ප්රමිතීන්ට අනුකූලව පාලනය නවීකරණය කරනවාද, ජනතාවගේ ආරක්ෂාව තහවුරු කරනවාද, අනාගත පරපුරට අවස්ථා විවර කරනවාද යන්න තක්සේරු කළ යුතුයි. එය ඇගයීමට ලක් කළ යුත්තේ ඒ පදනම මතය.
ඒ අර්ථයෙන් ගත් කල, ජාතික න්යෂ්ටික ආරක්ෂණ සම්බන්ධීකරණ කමිටුව පිහිටුවීමේ තීරණය ජාතික ජන බලය ආණ්ඩුවේ විද්යාව පදනම් කරගත් පාලන ප්රවේශයේ උදාහරණයක් ලෙස පෙනී සිටියි.
එබැවින් ශ්රී ලංකාවේ අනාගතය ගොඩනැගිය යුත්තේ අතීත දේශපාලන අසාර්ථකත්වයන් ගැන කතා කිරීමෙන් පමණක් නොවේ. එහි සාර්ථකත්වය පවතින්නේ විද්යාව, තාක්ෂණය, ආර්ථිකය, ජාතික ආරක්ෂාව සහ මානවවාදය මත පදනම් වූ නව පරිපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීම තුළ ය.
1948 සිට ශ්රී ලංකාවේ දේශපාලන ගමන තුළ අනාගත ලෝකයේ අභියෝග අපේක්ෂා කිරීම සහ ඒවාට විසඳුම් සෙවීම සඳහා ආයතනික ව්යුහයන් ගොඩනැගීම අතිශයින් අවශ්ය පරිවර්තනයකි. අනුර කුමාර දිසානායකගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුවේ මෙම කැබිනට් තීරණය එම පරිවර්තනයේ වැදගත් පියවරක් ලෙස සැලකිය යුතුය.
මක්නිසාද යත් රටක් දියුණු වූ පසු එහි ජනතාව ආරක්ෂා කරන්නේ නැත. එය සැබෑ සංවර්ධනයක් අත්කර ගන්නේ එහි ජනතාව ආරක්ෂා කිරීම සඳහා ශක්තිමත් ව්යුහයන් නිර්මාණය කිරීමෙන් පමණි.
අද ස්ථාපිත කෙරෙන මෙම ආරක්ෂක රාමුව හෙට දවසේ ශ්රී ලංකාවේ විද්යාත්මක ප්රගතිය, ආර්ථික විශ්වසනීයත්වය සහ මහජන ආරක්ෂාව සඳහා ශක්තිමත් පදනමක් විය යුතුය. මෙයද දේශපාලන පරම්පරාවෙන් ඔබ්බට විහිදෙන රටට අයත් ජාතික වගකීමකි.
අහමත් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත,
25-11-2026.
සිංහල පරිවර්තනය සමග).தேசிய பாதுகாப்பின் புதிய அத்தியாயம்: அணுசக்தி அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்கும் வரலாற்று தீர்மானம்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 25, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 25, 2026
Rating:




கருத்துகள் இல்லை: