Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பள்ளிவாசல் சொத்துக்களின் தவறான பயன்பாடு அதிகார துஷ்பிரயோகம் நம்பிக்கை மோசடி கடமையில் அலட்சியம் வக்பு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல் நிர்வாக இயலாமை மேற்கண்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்: நம்பிக்கையாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவர்


பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவித்தல்.


சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கைக் பொறுப்பாளர்கள், விசேட நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களிடையே விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வறிவித்தல் வெளியிடப்படுகிறது.

இலங்கை வக்பு சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, பதிவு செய்யப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானங்கள், செலவுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக வெளிப்படைத்
தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படுவது கட்டாயப் பொறுப்பாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டிக் கொள்கின்றோம்.

அதனடிப்படையில், கீழ்வரும் விடயங்கள் மிகவும் கவனத்துடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

1.அரையாண்டு கணக்கறிக்கைகள் தயாரித்தல் இலங்கை வக்பு சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, ஒவ்வொரு ஆண்டின்: ஜனவரி 01 முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை ஜூலை 01 முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை
முடிவடையும் அரையாண்டுகளுக்கான அனைத்து வரவு–செலவு கணக்குகளும் சரியான கணக்குப் பதிவுகளுடன் தயாரிக்கப்பட வேண்டும்.
அல்லது, ஜனவரி 01 முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான முழு ஆண்டிற்குமான ஆண்டு கணக்கறிக்கையும் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படலாம்.அத்தகைய கணக்குகள்: உண்மையானவை,
சரியானவை என்பதை உறுதிப்படுத்தி, நம்பிக்கையாளர்கள் கையொப்பமிட்டு உறுதிமொழியுடன் தயாரிக்கப்பட வேண்டும்.

2. வக்பு சபை / திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல்
தயாரிக்கப்பட்ட அரையாண்டு கணக்கறிக்கைகள், அரையாண்டு முடிவடைந்த பின்னர் 30 நாட்களுக்குள் இலங்கை வக்பு சபைக்கு அல்லது திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
(Ref: Wakfs Act Sec 27 (1) (a) (b) (c))

3.ஜமாஅத்தாரின் பார்வைக்காக காட்சிப்படுத்தல் கணக்கறிக்கையின் பிரதியொன்று: பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அறிவித்தல் பலகையில், ஜமாஅத்தார் தெளிவாகப் பார்வையிடக்கூடிய இடத்தில்,
தொடர்ச்சியாக 30 நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

4. கணக்குப் பதிவுகளின் மொழி வழமையாக எந்த மொழியில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றனவோ, அதே மொழியிலேயே கணக்கறிக்கைகளும் தயாரிக்கப்பட வேண்டும். (Ref: Wakfs Act Sec 27 (2))

5.கணக்காய்வு தொடர்பாக நம்பிக்கையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் கணக்குகள்: கணக்காய்வாளர் ஒருவரினாலோ,அல்லது வக்பு சபையால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நபரினாலோ கணக்காய்வு செய்யப்படலாம். (Ref: Wakfs Act Sec 28)

6. நம்பிக்கையாளர்களின் சட்டப் பொறுப்புகள் இலங்கை வக்பு சட்டத்தின் பிரிவு 29 இன் கீழ், பள்ளிவாசல் வரவு–செலவு மற்றும் கணக்கு நிர்வாகம் தொடர்பாக கீழ்க்கண்ட விடயங்கள் குறித்து முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்:

பள்ளிவாசல் சொத்துக்களின் தவறான பயன்பாடு அதிகார துஷ்பிரயோகம்
நம்பிக்கை மோசடி கடமையில் அலட்சியம் வக்பு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல் நிர்வாக இயலாமை மேற்கண்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்: நம்பிக்கையாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்படலாம்,
அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம். தேவையான சந்தர்ப்பங்களில் இடைக்கால நம்பிக்கையாளர்களும் நியமிக்கப்படலாம்.
(Ref: Wakfs Act Sec 29 (1) (2) (3) (4))

பள்ளிவாசல் என்பது ஒரு சமூகத்தின் அமானத் (பொறுப்பு) ஆகும். அதன் சொத்துக்கள், நிதிகள் மற்றும் நிர்வாகம் அனைத்தும் அல்லாஹ்வின் பயத்துடனும், இலங்கை வக்பு சட்டத்தின் வரம்புகளுக்குள்ளும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும். எனவே அனைத்து நம்பிக்கையாளர்களும்: சரியான கணக்குப் பதிவுகளைப் பேணுதல் காலவரையறைக்குள் அறிக்கைகளை சமர்ப்பித்தல் ஜமாஅத்தாருக்கு பொறுப்புக்கூறுதல்
இலங்கை வக்பு சட்ட விதிமுறைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயல்படுதல் என்பனவற்றை தங்களது கட்டாயப் பொறுப்பாகக் கருதி செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

“பொறுப்புடன் நடப்போர் அல்லாஹ்விடத்திலும் மக்களிடத்திலும் கண்ணியமுடையவர்கள் ஆவர்.”
பள்ளிவாசல் சொத்துக்களின் தவறான பயன்பாடு அதிகார துஷ்பிரயோகம் நம்பிக்கை மோசடி கடமையில் அலட்சியம் வக்பு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல் நிர்வாக இயலாமை மேற்கண்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்: நம்பிக்கையாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவர் Reviewed by www.lankanvoice.lk on மே 28, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.