இலங்கை உலமா கட்சியின் பகிரங்க அழைப்பு
இந்த நாட்டின் தென்பகுதி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு தமிழ் தேசியத்தின் முக வெற்றிலை அடையாளமாக பார்க்கிறோமோ அதே போன்று தான் கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம்களின் தேசியத்தின் அடையாளத்தின் குறி அல்லது முக வெற்றிலை என முன்னாள் 21 வருட எம்பி சகோதரர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை தமிழர்களின் அடையாளம் என ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் அவர்கள் ஓட்டுப்போட்டு தம் பிரதிநிதிகளை தெரிவு செய்த கட்சியின் தலைமை வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள்.
கல்முனை முஸ்லிம்கள் தெரிவு செய்தது கிழக்கையோ கல்முனையையோ சேராத வெளி மாகாண தலைமைகளின் கட்சியை.
கல்முனை மக்களின் செல்வாக்குள்ள ஒரு முஸ்லிம் கட்சியின் தலைமையும் மக்கள் பிரதிநிதி இல்லாத நிலையில் கல்முனை என்பது சமூகத்தின் முகவெற்றிலை என்பது கேலிக்கூத்தான வசனமாகும்.
ஹரீஸ் முழு அதிகாரமும் பெற்றிருந்தார். எம்பியாக, மேயராக இருந்துள்ளார். அப்போதாவது கல்முனை சமூகத்துக்கென தனிக்கட்சியை உருவாக்கி அதனை பலப்படுத்த உதவியிருக்கலாம்.
அதை எதையும் செய்யாமல் இருந்து விட்டு இபோது முஸ்லிம் காங்கிரசில் இருந்து ஹக்கீம் என்ற துரோகியால் தூக்கி எறியப்பட்ட பின் இவற்றை பேசுவது இளமையில் எதையும் சாதிக்காதவன் முதுமையில் புலம்புவது போன்றதாகும்.
இன்று கல்முனை என்பது சமூகத்தின் முக வெற்றிலையாக இல்லை. கண்டவனெல்லாம் வந்து ஏமாற்றி விட்டு போகும் கிழக்கின் கக்கூஸ் ஆகி விட்டது.
இனியும் ஹரீஸ் அவர்கள் இவ்வாறு புலம்புவதை விடுத்து எம்முடன் இணைந்து கல்முனை முகவரியில், கல்முனை தலைமைத்துவத்தை பலப்படுத்த முன் வரவேண்டும். அப்போதுதான் கல்முனை என்பது முஸ்லிம்களின் முகவெற்றிலை என நாடு ஏற்கும்.
முபாறக் அப்துல் மஜீத்
இலங்கை உலமா கட்சி
இலங்கை உலமா கட்சியின் பகிரங்க அழைப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 01, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 01, 2026
Rating:

கருத்துகள் இல்லை: