6 தமிழ் பேசும் கட்சிகள் ‘சங்கமம்’: நாளை கொழும்பில் விசேட ஊடக சந்திப்பு
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமக்கிடையிலான பரஸ்பர மற்றும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளன என்று தெரியவருகின்றது.
இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை திங்கட்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதன்போது நடைபெறும் ஊடக சந்திப்பின்போது இதன் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,
தமிழ் முற்போக்கு கூட்டணி,
இலங்கை தமிழரசுக் கட்சி,
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
ஆகியனவே இவ்வாறு இணைந்துசெயல்படவுள்ளன.
6 தமிழ் பேசும் கட்சிகள் ‘சங்கமம்’: நாளை கொழும்பில் விசேட ஊடக சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 12, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 12, 2026
Rating:

கருத்துகள் இல்லை: