Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கட்டார் சென்றார்.


முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரான அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கும், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஜூலை (14) இன்று மாலை கட்டார் இராச்சியம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் அவர்கள், இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மீள உறுதிப்படுத்துவதற்கும் கட்டார் இராச்சியத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

இவ்விஜயமானது இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான, சினேகபூர்வ உறவினைப் பிரதிபலிப்பதுடன், கட்டார் இராச்சியத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது

பிரதமர் ஊடகப் பிரிவு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கட்டார் சென்றார். Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.