Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஏலத்திற்கு வரும் 'Hand Of God' சர்ச்சை பந்து.. 77 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு!

1986 உலகக்கோப்பை காலிறுதியில் மரடோனாவின் சர்ச்சைக்குரிய ‘கடவுளின் கை கோல்’ அடிக்கப்பட்ட பந்து ஹெரிட்டேஜ் நிறுவனம் மூலம் ஏலத்திற்கு வருகிறது. நடுவரிடம் பாதுகாப்பாக இருந்த இந்த வரலாற்றுப் பந்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாயில் தொடங்கும் இந்த ஏலம், அதிகபட்சம் 77 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


1986ஆம் ஆண்டு உலகக்கோப்பையானது இங்கிலாந்து-அர்ஜெண்டினாவின் காலிறுதி மோதலில் ஒரு அழிக்கமுடியாத நிகழ்வை விட்டுச்சென்றது. அர்ஜெண்டினாவின் ஜாம்பவனான மரடோனா சர்ச்சைக்குரிய ’கடவுளின் கை கோல்’-ஐ அடித்தது அந்தப்போட்டியில் தான். அவர் கையால் தட்டிவிட்ட கோல் தற்போதைய VAR அம்சம் இல்லாததால் நடுவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. 


போட்டிக்குப் பிறகு அந்த கோல் குறித்து பேசிய மரடோனா, 'மரடோனாவின் தலையாலும், கடவுளின் கையாலும்’ அடிக்கப்பட்டது என்று கூறியது வரலாற்றில் அழியாத சம்பவமாக பதிவானது. 

அதனாலேயே அந்த கோல் ‘Hand of God Goal' நினைவுகூறப்படுகிறது.

ஏலத்திற்கு வரும் 'Hand Of God' சர்ச்சை பந்து.. 77 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு! Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 19, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.