Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

செம்மணிப் படுகொலையை தமிழர்கள் பேசும்போது, பாசிச புலிகள் நடத்திய காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை - முஸ்லிம்கள் ஏன் பேசக் கூடாது


(சிரேஷ்ட  ஊடகவியலாளர்
UL.மப்றூக்)

காத்தான்குடி பள்ளிவாசலில், பாசிசப் புலிகள் நடத்திய இனப்படுகொ*லையின் 36ஆவது வருடத்தை நினைவு கூரும் வகையில், இரண்டு வீடியோகளை கடந்த மூன்றாம் திகதி வெளியிட்டிருந்தேன்.

🔹அப்படிச் செய்வதால், தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையில் தேவையில்லாத பகைமை ஏற்பட்டு விடும் என்று, சிலர் கருத்துக்களைத் தெரிவித்திருக்றார்கள்.

🔹எப்போதோ நடந்த பழைய விடயத்தை, இப்போது ஏன் நினைவு கூருகின்றீர்கள் என்று, இன்னும் சிலர் கேள்வி எழுப்புறார்கள்.

🔹புலிகள் இப்போது உயிருடன் இல்லைதானே, எனவே இதை இப்போது ஏன் பேசுகிறீர்கள் என்றும் சிலர் வாதம் புரிகின்றார்கள்.

🔹காத்தான்குடி பள்ளிவாசல் படுகொ*லை போன்ற, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, மறந்தும் மன்னித்தும் விடுவதுதான், தமிழ் - முஸ்லிம் இன நல்லுறவுக்கு நல்லது என்று, சிலர் கூறுகின்றார்கள்.

🔹காத்தான்குடி படுகொ*லையைப் பற்றி, நான் வெளியிட்டுள்ள பதிவில், வீரமுனை படுகொ*லைகளையும் எழுதுங்கள் என்கிறார்கள். அதாவது தமிழர்களை முஸ்லிம்கள் கொன்றதையும் கூறுங்கள் என்கிறார்கள்.

இவை அனைத்துமே என்னைப் பொறுத்தவரை - கபடத்தனமான, இன நல்லுறவுக்காக பேசுகின்றவர்கள் எனும் முகமூடி அணிந்தவர்களின் நச்சு வார்த்தைகளாகும்.

🔴 எனது கேள்விகள்

🔹செம்மணிப் படுகொ*லையை தமிழர்கள் பேசும்போது, பாசிச புலிகள் நடத்திய காத்தான்குடி பள்ளிவாசல் படுகொ*லையை - முஸ்லிம்கள் ஏன் பேசக் கூடாது?

🔹முள்ளிவாய்க்கால் அவலத்தை தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் நினைவு கூரும்போது, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொ*லையினையும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதையும் ஏன் அந்த சமூகம் நினைவு கூரக்கூடாது?

🔹செம்மணியைப் பேசுவது நீதிக்கான போராட்டம் என்றாகும் போது, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொ*லையைப் பேசுவதால் மட்டும் எப்படி இனங்களுக்கு இடையில் விரிசல் வந்துவிடும்?

🔴 கசக்கும் உண்மைகள்

🔹காத்தான்குடி பள்ளிவாசல் படுகொ*லையை பாசிச புலிகளே செய்தார்கள். அது தமிழர்கள் செய்த படுகொலை அல்ல. எனவே, அதைப் பேசுவதால் - தமிழ் மக்களுக்கு கோபம் வரக்கூடாது. அப்படி கோபப்படுபவர்கள் பாசிச புலிகளாகத்தான் இருக்க வேண்டும்.

🔹தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில், இன முரண்பாடு வந்து விடும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். கசக்கும் உண்மை என்னவென்றால், இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையில், இப்போது கூட - நல்ல உறவு இல்லை.

🔹கொ*லைகளை யார் செய்தாலும் அதை மன்னிக்க முடியாது. காத்தான்குடி பள்ளிவாசலில் நடந்த இனப்படுகொ*லை போலவே, வீரமுனையில் நடந்ததும் இனப்படுகொ*லைதான். அதை எந்த 'நாய்' செய்திருந்தாலும், அந்த நாய்களும் சட்டத்தின் முன்பாக, தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.

🔹வடக்கிலிருந்து முஸ்லிம்களை பாசிசப் புலிகள் விரட்டியது, முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே என்று கூறுகின்ற 'விடுபேயர்கள்'தான், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொ*லையை இலங்கை ராணுவத்தினர் அல்லது ராணுவத்துடன் இயங்கிய தமிழ் இயக்கத்தவர்கள் நடத்தினார்கள் என்று, இன்றுவரை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

🔹 புலிகள் இப்போது இல்லைதானே, இல்லாதவர்களைப் பற்றி - ஏன் பேச வேண்டும்? என்று கூறுவது, ஒரு வகையான - தப்பிக்கும் தந்திரமாகும். புலிகள் இப்போதும் இருக்கிறார்கள். ஆயுதங்களுடன் சரணடைந்த 12,000 பேர்  இப்போதும் முன்னாள் போராளிகள் எனும் பெயரில், வெளியில் உலவிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஏராளமானோர் - இன்னும் பிரபாகரனை தலைவனாகவும் பாசிசத்தை கொள்கையாகவும் ஏற்று பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே, புலிகளின் குற்றங்களுக்கு அவர்களும் வகை கூறியே ஆக வேண்டும்.
🔴

நான் மீண்டும் அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன். பாசிசப் புலிகள் நடத்திய - முஸ்லிம்களுக்கு எதிரான எந்தத் தாக்குதலையும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

தமிழர்கள் தங்கள் இன அழிப்புக்கு எதிராக - நீதி கோருவதற்கு இருக்கின்ற அத்தனை உரிமைகளும், முஸ்லிம்கள் மீது - புலிகள் நடத்திய பாசிச தாக்குதல்களுக்கு எதிராக, முஸ்லிம்கள் நீதி கோருவதற்கும் இருக்கின்றன.


செம்மணிப் படுகொலையை தமிழர்கள் பேசும்போது, பாசிச புலிகள் நடத்திய காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையை - முஸ்லிம்கள் ஏன் பேசக் கூடாது Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 06, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.