முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 100 மணித்தியால சிங்கள மொழிப் பயிற்சி
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 100 மணித்தியால சிங்கள மொழிப் பயிற்சி
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிழக்கு மாகாண தேசிய மொழிகள் பிரிவின் மத்திய நிலையத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 100 மணித்தியால சிங்கள மொழிப் பயிற்சிப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 55 முன்பள்ளி ஆசிரியர்களுக்காக இப்பயிற்சிப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்களின் சிங்கள மொழி அறிவை மேம்படுத்துவதன் ஊடாக, முன்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை சிங்கள மொழியறிவை வழங்குவதே இப்பயிற்சியின் பிரதான நோக்கமாகும்.
உதவி மாவட்ட செயலாளர் கு. பிரணவன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சித் திட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சந்திரகுமார், கிழக்கு மாகாண நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர். சுபாசினி, முகாமைத்துவ உத்தியோகத்தர் எம். ஷாருகாசன், மாவட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ. முரளிதரன் மற்றும் வளவாளர் திருமதி கு. திலினி மதுசிக்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 100 மணித்தியால சிங்கள மொழிப் பயிற்சி
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2026
Rating:






கருத்துகள் இல்லை: