2000 கோடி முதலீட்டை சுமந்து மட்டக்களப்பிற்கு வந்த இந்திய முதலீட்டாளர்கள்!!
இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய முதலீட்டாளர்களுடனான சிறப்பு கலந்துரையாடல் இந்தியா – இலங்கை வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய
கைத்தொழில் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் மற்றும் பொருளாதார வல்லுனர் எஸ். சுந்தர் தலைமையிலான 40 இற்கு மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பானது இருநாட்டு வர்த்தகர்களிடையே புதிய தொடர்புகளை உருவாக்குவதோடு, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களும் சுய தொழில் முயற்சியாளர்கள் இந்திய வர்த்தகர்களுடன் நேரடி உரையாடல்களை மேற்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கியதுடன் மேலும், இப்பகுதியில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக ஆராய்வதற்கும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகங்களை வலுப்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும்.
புதிய சர்வதேச சந்தைகளை அடையாளம் காணுதல், கூட்டு வர்த்தக முயற்சிகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை கட்டியெழுப்புதல் ஆகிய முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உள்ளூர் தொழில்முனைவோரும் வணிகர்களும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இக் கலந்துரையாடல் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்ததுடன், இதன் போது வருகை தந்திருந்த முதலீட்டாளர்கள் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டினை மேற்கொள்ள தயாராக வந்திருப்பதாகவும், அதிலும் குறிப்பாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் தம்மால் உதவ முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
2000 கோடி முதலீட்டை சுமந்து மட்டக்களப்பிற்கு வந்த இந்திய முதலீட்டாளர்கள்!!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2026
Rating:






கருத்துகள் இல்லை: