Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

(සිංහල පරිවර්තනය සමග)தேசியப் பட்டியல் ஆசனங்களின் உருவாக்கத்தின் பின்னணி என்ன? அந்த நோக்கம் சுயநல அரசியலுக்கு பலியிடப்படுகின்றதா...?


(සිංහල පරිවර්තනය සමග)தேசியப் பட்டியல் ஆசனங்களின் உருவாக்கத்தின் பின்னணி என்ன? அந்த நோக்கம் சுயநல அரசியலுக்கு பலியிடப்படுகின்றதா?
ජාතික ආසන ලැයිස්තුව නිර්මාණය කිරීමේ පසුබිම කුමක්ද? ඒ අරමුණ ආත්මාර්ථකාමී දේශපාලනයට බිල්ලට දෙනවාද?

தேசியப்பட்டியல் என்பது தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் அல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தினதும், தேசத்தினதும் முன்னேற்றத்திற்கான ஒரு பொறுப்பு என்பதை அரசியல் தலைமைகள் உணரும் போதே சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலமடைய வாய்பேற்படும்.

சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தங்களின் சுயநல அரசியல் பிழைப்புக்காகவும், பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தேசியப்பட்டியல் ஆசனங்களை "நரி அப்பம் பிரித்தது போல்" மாதக்கணக்கில் சுழற்சி முறை ஒப்பந்தங்களாகப் பகிர்ந்தளித்து வருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்குப் பிறகு, சமூக ஊடகங்கள் மற்றும் பொது விவாதங்கள் வாயிலாக இளைஞர்கள் இத்தகைய ஏமாற்று அரசியலையும் பசப்பு வார்த்தைகளையும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.


இலங்கையின் தேர்தல் முறையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் (National List MP) பதவி உருவாக்கப் பட்டதற்கான முக்கிய நோக்கம், தேர்தல் அரசியலில் நேரடியாகப் போட்டியிட விரும்பாத அல்லது மக்கள் செல்வாக்குத் திரட்ட முடியாத அறிஞர்கள், நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வருவதாகும்.

சட்டம், பொருளாதாரம், மருத்துவம், பொறியியல், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் அறிஞர்கள், பேராசிரியர்கள், தொழில்முறை வல்லுநர்கள் போன்றோரின் ஆலோசனைகளும் அறிவும் நாட்டின் கொள்கை வகுப்பிற்கும் பாராளுமன்ற விவாதங்களுக்கும் அவசியம். அவர்கள் நேரடியாகத் தேர்தலில் நின்று வாக்குக் கேட்கும் அரசியல் பின்னணி இல்லாததால், அவர்களை நேரடியாக பாராளுமன்றத்திற்கு நியமிக்க தேசியப்பட்டியலானது வழிவகுக்கிறது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் நேரடியாகத் தேர்வாவதில் சிரம எதிர்கொள்ளும் சிறுபான்மை சமூகங்கள், பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு பாரளுமன்றத்தில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி அரசியலைமைப்பில் ஒதுக்கப்ப.டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் உதவுகிறது.


இலங்கையில் 1971-ஆம் ஆண்டுக்கு முன்னர் 'செனட் சபை' என்ற மேல்சபை இருந்தது, அதில் இத்தகைய நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். அச்சபை ஒழிக்கப்பட்ட பின்னர், அந்த வெற்றிடத்தை நிரப்பவே இந்த தேசியப்பட்டியல் முறை கொண்டு வரப்பட்டது.

இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற ஆசனங்களில் 29 இடங்கள் தேசியப் பட்டியலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தேசிய அளவில் பெறும் மொத்த வாக்குகளின் சதவீதத்திற்கு விகிதாசாரமாக இந்த 29 இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. மக்கள் நேரடியாக இந்த உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதில்லை எற்றாலும், கட்சித் தலைமைகளே தங்களுக்குக் கிடைக்கும் இடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்கின்றன.

இருந்தும், இலங்கையில் தற்பொழுது பகிந்தளிக்கப்படும் தேசியப்பட்டியல் ஆசனங்களானது, தற்போதைய அரசியல் சூழலில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களின் சுயலாபங்களுக்காகவும், பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் விடயமாக மாறியுள்ளது. அதற்கான கால எல்லைகளைத் தீர்மானிப்பதில் வழங்கப்படும் வாக்குறுதிகளை பார்க்கின்ற பொழுது "நரி அப்பம் பிரித்த கதை"யை போன்ற சம்வமாகிவிட்டது கட்சித் தலைவர்களின் அரசியல் நாடகம். இன்னும் சொல்வதாயின், குரங்கின் கைககளில் பூமாலை கிடைத்தைப் போன்று நிரந்தமாக ஒருவரின் கைகளில் இல்லாமல் அங்கிமிங்குமாக அலை  மோதுவதையும் காணக்கிடைக்கின்றது.

"நரி அப்பம் பிரித்த கதை" என்ற உவமை, சிறுபான்மைக் கட்சிகளுக்குள் நிலவும் அதிகாரப் போட்டியையும், தேசியப்பட்டியல் ஆனத்தை பிரித்து வழங்குகின்ற காலத்தையும் மிகவும் துல்லியமாக காட்டுகின்றது. கட்சிகளின் கொள்கைகளுக்கோ அல்லது சமூகத்தின் நீண்டகால நலன்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதை விட, தங்களது பதவிக்காலத்தை எவ்வாறு நீடிப்பது அல்லது தங்களுக்கு சாதகமாக மாற்றுவது என்பதில் கட்சித் தலைவர்கள் காட்டும் தீவிரமும், அதில் அவர்கள் அடையும் தற்காலிக வெற்றியும் தற்பொழுது அம்பலமாகவும் தொடங்கியுள்ளது.

முக்கியமாக தனித்துவம் பேசுகின்ற  சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளுக்கு கிடைக்கும் ஒரு சில ஆசனங்களை ஒரு வருக்கு ஆறுமாதம், இன்னொருவருக்கு ஒரு வருடம் என்றும், ஏறாவூருக்கு மூன்று மாதம் பொத்துவிலுக்கு, புத்தளத்திற்கும்  என பந்தாடப்படுவது அரசியல் தலைமைகளின் சுயநல அரசியல் வெற்றிக்காக பிரதேச சமூகங்களை ஏமாற்றி விற்றுப் பிழைக்கும் அரசியல் சித்து விளையாட்டாகவே புத்திஜீவிகளினால் பார்க்கப்படுகின்றது.

தேர்தலின் காலங்களின் போது கிழக்கு மாகாணத்தில் பிரித்தாளும் அரசியலுக்காக குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கு ( ஏறாவூர், பொத்துவில், கல்குடா,அட்டாளைச்சேனை, நிந்தவூர், மூதூர், கின்னியா, புத்தளம்) வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கருவியாக தேசியப்பட்டியல் எனும் சமாச்சாரம்  பயன்படுத்தப்படுகின்றன.

சுழற்சி முறை ஒப்பந்தங்கள் எனும் கண்கட்டி ஏமாற்று அரசியல் வித்தையில் ஒருவருக்கு 6 மாதங்கள் என்றும், இன்னொருவருக்கு ஒரு வருடம் எனப் பிரித்துக் கொடுக்கப்படுவதால், பாராளுமன்றத்திற்குச் செல்லும் பிரதிநிதியால் பாராளூமன்றத்தை வாழ்நாளில் பார்த்ததை தவிர எவ்வித நீண்டகால திட்டங்களையோ அல்லது நிலையான மக்கள் சேவையையோ செய முடியாமல் போனதுதான் வரலாறாக அமையும்.

தனித்துவம் பேசுகின்ற கட்சித் தலைமைகின் தலைமைகளின் சுயநல அரசியல் வெற்றிக்காக தங்களது கட்சிக்குள்ளும், பிரதேசங்களுக்கு இடையிலும் ஏற்படும் முரண்பாடுகளைத் தற்காலிகமாகத் தீர்ப்பதற்கும், அரசியல் தலைமைகள் தங்களின் பதவிகளைத் தக்கவைப்பதற்கும் இது ஒரு "கொடுக்கல் வாங்கல்" அரசியல் சித்து விளையாட்டாகவே கிழக்கு பிராந்தியத்தில் மாறியுள்ளது.

இதனால், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய தேசியப்பட்டியலின் உன்னத நோக்கம் சிதைக்கப்பட்டு, சமூகம் சார்ந்த ஒருமித்த முடிவுகளை எடுக்க முடியாமல், தங்களுக்குள் ஆசனத்தினை பெறுவதற்காக முரண்பட்டுக் கொள்ளும் வெறும் "பிராந்திய சமரசக் கருவியாக" அது தரம் தாழ்த்தப்பட்டுள்ளது.

முக்கியமாக தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் கொள்வதற்காக, "வெற்றி பெற்றால் உங்கள் பிரதேசத்திற்கு தேசிய பட்டியல் எம்பி (MP) பதவி வழங்கப்படும்" என்ற வாக்குறுதி தனித்துவக் கட்சிகளின் தலைவர்களால் பரவலாக வழங்கப்படுகிறது.

தேர்தலுக்குப் பின், கட்சித் தலைமைகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ அல்லது வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கோ அந்தப் பதவிகளை வழங்குவதும், இதனால் ஏமாற்றமடைந்த பிரதேச மக்கள் ஏமாற்றத்துடன் தங்களை ஆறுதல்படுத்திக் கொள்வதும் காலங்காலமாக நடக்கும் ஒரு சடங்காகவே மாறியுள்ளது.

இதன் மூலம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்குள் இருக்கும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையிலும் தேவையற்ற பிராந்தியவாதப் போட்டிகள் வளர்க்கப்பட்டு விடப்பட்டுள்ளன.

பாமர மக்கள் நீண்டகாலமாக "சமூக அரசியல்", "தனித்துவ அரசியல்" என்ற பசப்பு வார்த்தைகளால் உணர்ச்சிவசப்பட்டு வாக்களித்து வந்த நிலைமை தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியின் பின்னர், 
இன்றைய இளைஞர் சமூகத்தினால் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை என்ன? கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை? போன்ற நேரடி கேள்விகளை இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பொது விவாதங்கள் வாயிலாக எழுப்பி வருகின்றனர்.

வாக்கு என்பது தங்களின் உரிமை மற்றும் எதிர்காலம் என்பதைப் பாமர மக்களுக்குப் புரிய வைக்கும் விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை இளைஞர்கள் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். அரசியலுக்குப் பின்னால் ஓடாமல், கொள்கை மற்றும் தகுதி அடிப்படையிலான, சமூகத்திற்கு உண்மையாகப் பங்காற்றக்கூடிய மாற்று அரசியல் சக்திகள் மற்றும் தலைமைகளை நோக்கி மக்களை வழி நடத்த இளைஞர்கள் களமிறங்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு, கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலில் நீண்டகாலமாக இருந்து வரும் ஏமாற்று அரசியலுக்கும், "தேசிய பட்டியல் வியாபாரத்திற்கும்" முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு ஆரோக்கியமான ஆரம்பம் என்பதே புத்திஜீவிகளினதும், நடுநிலை சிந்தனையாளர்களினதும் பார்வையாக உள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் பல தலைவர்கள் இதனைப் பொதுநல நோக்குடன் அணுகாமல், தமது சொந்த அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும், "நரி அப்பத்தைப் பிரிப்பது போல" தங்களுக்குள் மாதக்கணக்கில் பங்கிட்டுக் கொள்ளவும் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயமாக அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் என்பது தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் அல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தினதும், தேசத்தினதும் முன்னேற்றத்திற்கான ஒரு பொறுப்பு என்பதை அரசியல் தலைமைகள் உணரும் போதே சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலமடைய வாய்பேற்படும்.

அல்லது சமூகத்தில் உள்ள துறைசார் வல்லுநர்கள், பொருளாதார மேதைகள் அல்லது சட்ட நிபுணர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, நாட்டின் கொள்கை வகுப்பில் செல்வாக்கு செலுத்த வைக்க வேண்டும். பிரதிநிதித்துவம் கிடைக்காத அல்லது பின்தங்கிய பிரதேசங்களின் குரலாக ஒருவரைத் தெரிவு செய்து, அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு வழிவகுக்க வேண்டும்.

ஆகவே, சிறுபான்மை கட்சித் தலைவர்களுக்கு கிடைக்கு ஒருசில தேசியப்பட்டியல் ஆசனத்தை தமது சுயநல அரசியலுக்காக நரி அப்பத்தினை பிரித்துக் கொடுப்பதை போன்று மாதக்கணக்கில் பங்கிடாமல் சமூகத்தின் அபிவிருத்திக்காக அல்லது பிரதேசத்தினதும், ஒட்டு மொத்த நாட்டினதும் நன்மைக்காக வழங்குவதே உண்மையான அரசியல் தலைமைக்கு உள்ள பன்பாக அமையும்.

அஹமட் இர்ஷாட்.
01-09-2026

ජාතික ආසන ලැයිස්තුව නිර්මාණය කිරීමේ පසුබිම කුමක්ද? ඒ අරමුණ ආත්මාර්ථකාමී දේශපාලනයට බිල්ලට දෙනවාද?

ජාතිකවාදය තමන්ට ආශිර්වාදයක් නොවන බවත් එය සමස්ත සමාජයේත් ජාතියේත් ප්‍රගමනයට වගකීමක් බව දේශපාලන නායකයන් අවබෝධ කරගත් විට සුළු ජාතික ප්‍රජාවන්ගේ දේශපාලනය ශක්තිමත් වනු ඇත.

සුළු ජාතික පක්ෂ නායකයන් තම ආත්මාර්ථකාමී දේශපාලන පැවැත්ම සඳහා සහ තනතුරු රැකගැනීම සඳහා මාසයක චක්‍රීය කොන්ත්‍රාත්තුවලින් "නරි අප්පම් ප්‍රීති වැනි" ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුර බෙදමින් සිටිති.

ජාතික ජන බලය නැඟීමෙන් පසු සමාජ මාධ්‍ය සහ ප්‍රසිද්ධ වාද විවාද හරහා තරුණයින් මෙවැනි කපටි දේශපාලනය සහ වාචාල කතා ප්‍රශ්න කිරීමට පටන් ගෙන තිබේ.


ශ්‍රී ලංකාවේ මැතිවරණ ක්‍රමය තුළ ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුරය නිර්මාණය කිරීමේ ප්‍රධාන අරමුණ වන්නේ මැතිවරණ දේශපාලනයට සෘජුව තරග කිරීමට අකමැති හෝ ජනප්‍රිය බලපෑම් එකතු කර ගැනීමට නොහැකි උගතුන්, ප්‍රවීණයන් සහ විද්වතුන් පාර්ලිමේන්තුවට ගෙන ඒමයි.

නීතිය, ආර්ථික විද්‍යාව, වෛද්‍ය විද්‍යාව, ඉංජිනේරු විද්‍යාව, අධ්‍යාපනය ආදී විවිධ ක්ෂේත්‍රවල කීර්තිමත් උගතුන්ගේ, මහාචාර්යවරුන්ගේ සහ වෘත්තිකයන්ගේ උපදෙස් හා දැනුම රටේ ප්‍රතිපත්ති සම්පාදනය සහ පාර්ලිමේන්තු විවාද සඳහා අත්‍යවශ්‍ය වේ. ඍජු මැතිවරණයකට ඉදිරිපත් වීමට තරම් දේශපාලන පසුබිමක් ඔවුන්ට නොමැති නිසා ඔවුන් සෘජුවම පාර්ලිමේන්තුවට පත් කිරීමට ජාතික ලැයිස්තුව හේතු වේ.

එසේම, ව්‍යවස්ථාපිතව වෙන් කර ඇති ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධූර රටේ ඇතැම් ප්‍රදේශවල ජනගහනය අනුව සෘජු මැතිවරණවලදී දුෂ්කරතාවන්ට මුහුණ දෙන සුළුතර ප්‍රජාවන්, කාන්තාවන් සහ පසුගාමී පන්ති සඳහා පාර්ලිමේන්තුවේ සමාන නියෝජනයක් සහතික කිරීමට උපකාරී වේ.

1971 ට පෙර ශ්‍රී ලංකාවේ ‘සෙනෙට් සභාව’ නමින් ඉහළ මන්ත්‍රී මණ්ඩලයක් පැවති අතර එම විශේෂඥයින් පත් කරන ලදී. අච්චාබා අහෝසි කිරීමෙන් පසු එම පුරප්පාඩුව පිරවීම සඳහා මෙම ජාතික ලැයිස්තු ක්‍රමය හඳුන්වා දෙන ලදී.

ශ්‍රී ලංකාවේ මුළු පාර්ලිමේන්තු ආසන 225 න් ආසන 29 ක් ජාතික ලැයිස්තුවට වෙන් කර ඇත. පාර්ලිමේන්තු මැතිවරණයේදී දේශපාලන පක්ෂයක් හෝ ස්වාධීන කණ්ඩායමක් ජාතික මට්ටමින් ලබාගන්නා මුළු ඡන්ද ප්‍රතිශතයට සමානුපාතිකව මෙම ආසන 29 බෙදී යයි. ජනතාව ඍජුව මේ මන්ත්‍රීවරුන්ට ඡන්දය නොදුන්නත් පක්ෂ නායකත්වය තමන්ට තිබෙන ආසනවලට සුදුස්සන් පත් කරනවා.

කෙසේ වෙතත් දැනට ශ්‍රී ලංකාවේ ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුර ලබාදීම වත්මන් දේශපාලන වාතාවරණය තුළ සුළු ජාතික පක්ෂ නායකයන්ගේ සහ ප්‍රධාන සාමාජිකයන්ගේ ආත්මාර්ථකාමීත්වය සඳහා තනතුරු බෙදාගැනීමේ ප්‍රශ්නයක් බවට පත්ව ඇත. කාල සීමා නිර්ණය කිරීමේදී දුන් පොරොන්දු දෙස බලන විට පක්ෂ නායකයන්ගේ දේශපාලන නාටකය "නරි අප්පම් ප්‍රීත කති" කතාව මෙන් වී ඇත. එනම් වඳුරෙකුගේ අතේ මල් මාලයක් සොයාගන්නවාක් මෙන් රැල්ල හැමවිටම අතේ නැති බවද පෙනේ.

"නරි අප්පම් ප්‍රිත්ත කති" උපමාව සුළු පක්ෂ අභ්‍යන්තරයේ පවතින බල අරගලය සහ ජාතික ලැයිස්තුව බෙදීයාම ඉතා නිවැරදි ලෙස නිරූපණය කරයි. පක්‍ෂ ප්‍රතිපත්තිවලට හෝ සමාජයේ දීර්ඝ කාලීන අවශ්‍යතාවලට වැදගත්කමක් ලබා දෙනවාට වඩා තම ධූර කාලය දීර්ඝ කර ගන්නේ කෙසේද නැතහොත් එය තම වාසියට හරවා ගන්නේ කෙසේද යන්න පිළිබඳව පක්‍ෂ නායකයන් පෙන්වා දෙන බරපතළකමත්, ඒ තුළින් ඔවුන් ලබන තාවකාලික ජයග්‍රහණයත් දැන් හෙළිදරව් වීමට පටන් ගෙන තිබේ.

ප්‍රධාන වශයෙන්ම පුද්ගලවාදය ගැන කතා කරන සුළු ජාතික මුස්ලිම් පක්‍ෂවලට හිමි ආසන කිහිපය එක් අයෙකුට මාස හයකට, තවත් අයෙකුට වසරක්, පොතුවිල් සහ පුත්තලමට අටවූර්ට මාස තුන බැගින් ලබා දීම බුද්ධිමතුන් දකින්නේ දේශපාලන නායකයන්ගේ ආත්මාර්ථකාමී දේශපාලන ජයග්‍රහණය සඳහා ප්‍රාදේශීය ජන කොටස් රවටා විකිණීමේ දේශපාලන සෙල්ලමක් ලෙසය.

මැතිවරණ කාලවලදී නැගෙනහිර පළාතේ බෙදුම්වාදී දේශපාලනය සඳහා ඇතැම් ප්‍රදේශවල (එබ්‍රාවුර්, පොතුවිල්, කල්කටා, අට්ටාලයිචේන, නින්දවුර්, මුදූර්, කින්නියා, පුත්තලම) ජනතාවට පොරොන්දු දී ඡන්ද ලබා ගැනීමේ මෙවලමක් ලෙස ජාතික ලැයිස්තුව භාවිත කරයි.

පාපැදි කොන්ත්‍රාත්තුවේ දර්ශනීය රැවටිලිකාර දේශපාලන උපක්‍රමය තුළ එක් අයකුට මාස 6ක් ද තවත් අයෙකුට වසරක් ද ලබා දෙන බැවින් පාර්ලිමේන්තුවට යන නියෝජිතයාට තම ජීවිත කාලය තුළ පාර්ලිමේන්තුව දැකීම හැර දීර්ඝ කාලීන ව්‍යාපෘති හෝ ස්ථාවර රාජ්‍ය සේවයක් කිරීමට නොහැකි වීම ඉතිහාසය වනු ඇත.

පුද්ගලවාදී පක්‍ෂ නායකත්වයේ නායකයන්ගේ ආත්මාර්ථකාමී දේශපාලන ජයග්‍රහණය වෙනුවෙන් තම පක්‍ෂය තුළ සහ ප්‍රදේශ අතර ගැටුම් තාවකාලිකව සමනය කර ගැනීමටත් දේශපාලන නායකයන්ට තම තනතුරු රැක ගැනීමටත් නැඟෙනහිර කලාපයේ “මිලදී ගන්නට” දේශපාලනයේ සෙල්ලමක් බවට පත්ව ඇත.

මේ අනුව සමස්ත සමාජයේම හඬක් විය යුතු ජාතික ලැයිස්තුවේ උදාර අරමුණ විනාශ වී ගොස් ප්‍රජාව මත පදනම් වූ සම්මුති තීරණ ගැනීමට නොහැකිව අසුනක් ලබාගැනීමට එකිනෙකා පරස්පර වන හුදු "ප්‍රාදේශීය සම්මුති මෙවලමක්" බවට එය පිරිහී ඇත.

ප්‍රධාන වශයෙන්ම මැතිවරණ කාලවලදී, "ඔබගේ මැතිවරණ කොට්ඨාශයට ජාතික ලැයිස්තු මන්ත්‍රී (මන්ත්‍රී) තනතුර" යන පොරොන්දුව පුද්ගලවාදී පක්‍ෂ නායකයින් විසින් පුලුල් ලෙස ඉදිරිපත් කරනුයේ කිසියම් මැතිවරණ කොට්ඨාශයක ඡන්ද ඩැහැගැනීමටය.

මැතිවරණයෙන් පසු පක්ෂ නායකයන් එම තනතුරු තම සමීපතම හිතවතුන්ට හෝ වෙනත් ප්‍රදේශවලින් පැමිණි පුද්ගලයන්ට ලබා දීම කාලානුරූපී චාරිත්‍රයක් බවට පත් වී ඇති අතර, කලකිරුණු ප්‍රාදේශීය ජනතාව බලාපොරොත්තු සුන්වීමෙන් සනසති.

මේ හරහා අම්පාර, මඩකලපුව, ත්‍රිකුණාමලය වැනි දිස්ත්‍රික්ක අතර සහ දිස්ත්‍රික්ක තුළ විවිධ නගර අතර අනවශ්‍ය ප්‍රාදේශීය එදිරිවාදිකම් ඇති කර ඇත.

ජාතික ජන බලය නැගීමෙන් පසු සාමාන්‍ය ජනතාව බොහෝ කලක සිට “ප්‍රජා දේශපාලනය” සහ “පුද්ගල දේශපාලනය” යන ඝෝෂාකාරී වචන සමඟ දැඩි ලෙස ඡන්දය ප්‍රකාශ කළ තත්ත්වයකි. 
වර්තමාන තරුණ සමාජය විසින් පරිවර්තනය වෙමින් පවතී.

මැතිවරණ වේදිකාවල දෙන පොරොන්දුවල විශ්වසනීයත්වය කෙබඳුද? පසුගිය කාලයේ දුන් පොරොන්දු ඉටු නොකරන්නේ ඇයි? මෙවැනි සෘජු ප්‍රශ්න සමාජ මාධ්‍ය සහ ප්‍රසිද්ධ වාද විවාද හරහා තරුණ පරපුරෙන් මතුවෙමින් තිබේ.

ඡන්දය ප්‍රකාශ කිරීම ඔවුන්ගේ අයිතිය සහ අනාගතය බව සාමාන්‍ය ජනතාවට අවබෝධ කරදීම සඳහා තරුණ තරුණියන් දැනුවත් කිරීමේ වැඩසටහන් ආරම්භ කර තිබෙනවා. දේශපාලනය පිටුපස දුවනවා වෙනුවට ප්‍රතිපත්තිගරුක, කුසල් පදනම් කරගත්, සැබෑ ලෙසම සමාජයට දායක විය හැකි විකල්ප දේශපාලන බලවේග හා නායකත්වයන් කරා ජනතාව යොමු කිරීමට තරුණයන් පෙරට ඒමට පටන් ගෙන තිබේ.

නැඟෙනහිර පළාත් මුස්ලිම් දේශපාලනයේ දීර්ඝ කාලීන වංචනික දේශපාලනය සහ "ජාතික ලැයිස්තු ව්‍යාපාරය" නිමා කිරීමේ සෞඛ්‍ය සම්පන්න ආරම්භයක් ලෙස මෙම දැනුවත්භාවය බුද්ධිමතුන් සහ මධ්‍යස්ථ චින්තකයින් විසින් දකියි.

පවතින දේශපාලන වටපිටාව තුළ බොහෝ නායකයින් පොදු උවමනාවකින් මෙයට නොපැමිණ එය තම තමන්ගේ දේශපාලන පැවැත්ම පවත්වා ගෙන "නරියා පාන් බෙදන්නාක් මෙන්" මාස ගණන් තමන් අතරේ බෙදා හදා ගැනීම වේදනාකාරී දෙයක් ලෙස දේශපාලන නිරීක්ෂකයෝ දකිති.

ජාතිකවාදය තමන්ට ආශිර්වාදයක් නොවන බවත් එය සමස්ත සමාජයේත් ජාතියේත් ප්‍රගමනයට වගකීමක් බව දේශපාලන නායකයන් අවබෝධ කරගත් විට සුළු ජාතික ප්‍රජාවන්ගේ දේශපාලනය ශක්තිමත් වනු ඇත.

එසේත් නැතිනම් රටේ ප්‍රතිපත්ති සම්පාදනයට බලපෑම් කිරීමට සමාජයේ සිටින අංශ ප්‍රවීණයන්, ආර්ථික ප්‍රවීණයන් හෝ නීති විශාරදයන් පාර්ලිමේන්තුවට යවන්න. නියෝජනයක් නොමැති හෝ පසුගාමී ප්‍රදේශ වල හඬ ලෙස එක් පුද්ගලයෙකු තෝරාගෙන ප්‍රදේශයේ සංවර්ධනයට මග පෙන්විය යුතුයි.

ඒ නිසා තමන්ගේ ආත්මාර්ථකාමී දේශපාලනය වෙනුවෙන් ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුර කිහිපයක් සුළු ජාතික පක්ෂ නායකයන්ට ලබා දීම මිස සමාජයේ දියුණුව වෙනුවෙන් හෝ ප්‍රදේශයේ සහ රටේ සමස්ත යහපත වෙනුවෙන් මාස ගණන් බෙදීම සැබෑ දේශපාලන නායකත්වයේ භාග්‍යයක් වනු ඇත.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
01-09-2026.
(සිංහල පරිවර්තනය සමග)தேசியப் பட்டியல் ஆசனங்களின் உருவாக்கத்தின் பின்னணி என்ன? அந்த நோக்கம் சுயநல அரசியலுக்கு பலியிடப்படுகின்றதா...? Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.