Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) முஸ்லிம் சமூகத்தை அரசுக்கு எதிராக திசைதிருப்புவது யார்.? அவ்வாறு செய்வதன் பின்னணி என்ன.?


සිංහල පරිවර්තනය සමග) முஸ்லிம் சமூகத்தை அரசுக்கு எதிராக திசைதிருப்புவது யார்.? அவ்வாறு செய்வதன் பின்னணி என்ன.?

நீண்ட காலமாக மக்களின் வாக்குகளை தங்களது அரசியல் பலமாகக் கருதிய பல அரசியல்வாதிகள் கடந்த இரண்டு வருடங்களில் தேர்தல் ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்டதுடன், 

சிலர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அரங்கில் தங்களது முன்னைய செல்வாக்கையும் இழந்து வீட்டுக்கும் அனுப்பப்பட்டனர்.

இழந்த அரசியல்பலத்தை மீட்டெடுக்கவும் முஸ்லிம் வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கவும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீதான மக்கள் அதிருப்தி என்ற போர்வையில் தங்களது வழமையான அரசியல் முகத்தை காட்டத் தொடங்கியுள்ளனர்.



2024ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், குறிப்பாக வடக்கு–கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய முஸ்லிம் அரசியல், சமூக உரிமைகளையும் மக்களின் உண்மையான தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலைத் தாண்டி, தனிநபர் அரசியல் செல்வாக்கு, அதிகாரப் பேரம் மற்றும் பொருளாதார நலன்களைச் சுற்றிய அரசியல் சித்து விளையாட்டுத் தளமாக மாறியிருந்தது என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான உண்மை நிலவரமாகவும் பார்க்கப்பட்டது.

1980களுக்குப் பின்னரான, அதாவது கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நிலவிய இந்த அரசியல் கலாசாரத்தில், மத மற்றும் கலாச்சார உணர்வுகளைத் தூண்டி மக்களின் மனநிலையை அரசியல் நோக்கங்களுக்காக மாற்றுதல், பிரதேச அடிப்படையிலான கருத்தியல்களை உருவாக்கி சமூகத்தைப் பிரித்தாளுதல், தேசியக் கட்சிகளுடன் அமைச்சுப் பதவிகள் மற்றும் அதிகாரங்களுக்காக பேரம் பேசுதல், தமிழ்–முஸ்லிம் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடுதல் போன்ற உத்திகள் பயன்படுத்தப்பட்டன என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.


அதனுடன், அரச நியமனங்கள் மற்றும் வளங்களை அரசியல் செல்வாக்கின் மூலம் கையாள்வதன் மூலம், தகுதி மற்றும் போட்டித் தேர்வுகளைப் புறக்கணித்து அரசியல் விசுவாசிகளுக்கும் பினாமிகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், இவ்வாறான நியமனங்களைப் பணப் பரிமாற்றத்துடன் தொடர்புபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுதல் போன்ற குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன. இதனால், அரச வேலைவாய்ப்புகள் மக்களுக்கான சேவையாக இல்லாமல், அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தும் கருவியாக மாறியதாக விமர்சிக்கப்பட்டது.

அதேபோன்று, பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களை அரசியல் தொடர்புகளின் மூலம் வணிகமாக்குதல், அரச காணிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவினர்கள் அல்லது பினாமிகளின் பெயர்களுக்கு மாற்றுதல், போலியான அல்லது தேவைக்கு அதிகமான முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் நீண்டகாலக் குத்தகைகளில் அரச காணிகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற முறைகள் மூலம் அரச வளங்களைத் தனிப்பட்ட சொத்தாக மாற்றும் முயற்சிகள் இடம்பெற்றதாகவும் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.


அரசியல் அதிகாரத்தின் மூலம் தகுதியற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு அரச நிறுவனங்களில் பதவிகளைப் பெற்றுக்கொடுத்தல், மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பொதுக் கட்டடங்களில் தனிநபர்களின் பெயர்களைப் பொறித்து அரசியல் விளம்பரம் செய்தல், குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் செயலாளர், பிரத்தியேகச் செயலாளர், சாரதி, எழுதுநர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி, அரச நிதியிலிருந்து மாதச் சம்பளமாகத் தொடர்ச்சியான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற நடைமுறைகளும் அவர்களின் அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

இத்தகைய அரசியல் நடைமுறைகளுக்கு எதிராகவே 2024ஆம் ஆண்டு மக்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான NPP, இனம், மதம் மற்றும் பிரதேச அடையாளங்களைத் தாண்டி, சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, தகுதி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, “முறைமை மாற்றம்” (System Change) என்ற அரசியல் நோக்கத்தை முன்வைத்தது.

இந்த மாற்றத்தின் விளைவாக, குறிப்பாக வடக்கு–கிழக்கில் பல தசாப்தங்களாக நிலவிய தனித்துவ அரசியலின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்தது. நீண்டகாலமாக மக்களின் வாக்குகளைத் தங்களது தனிப்பட்ட அரசியல் பலமாகக் கருதிய பல அரசியல்வாதிகள் தேர்தல் ரீதியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டதுடன், சிலர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அரங்கில் தங்களது முன்னைய செல்வாக்கையும் இழந்து வீட்டுக்கும் அனுப்பப்பட்டனர்.


இதனால், 2024 பாராளுமன்றத் தேர்தலின்போது NPPக்கு எதிராக மத உணர்வுகளைத் தூண்டும் அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து நாடாளுமன்றத்திற்குள் சென்ற சில முஸ்லிம் தனித்துவ அரசியல் சக்திகள் இன்று புதிய அரசியல் சவாலை எதிர்கொள்கின்றன. ஊழல் மற்றும் அரசியல் சலுகைகளை எதிர்த்து NPP முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தங்களது பழைய அரசியல் செல்வாக்கை மேலும் பலவீனப்படுத்தக்கூடும் என்ற நிலையில், மீண்டும் மத உணர்வுகளையும் சமூக அச்சங்களையும் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

ஆனால், 2024ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் உட்பட நாடு முழுவதும் மக்கள் வழங்கிய வாக்கு, வெறுமனே ஒரு கட்சிக்கான வாக்காக மட்டும் பார்க்கப்படக் கூடாது. அது பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிராகவும், ஊழல், அதிகாரப் பேரம், குடும்ப ஆதிக்கம், அரச வளங்களின் துஷ்பிரயோகம் மற்றும் இன–மத அடிப்படையிலான பிரித்தாளும் அரசியலுக்கு எதிராகவும் வெளிப்பட்ட ஒரு மாற்றத்திற்கான மக்கள் தீர்ப்பாகும்.

எனவே, அந்த மக்கள் தீர்ப்பை மீண்டும் மதவாத அரசியல் சித்துவிளையாட்டுகளால் மாற்றிவிடலாம் என்று எவரும் கருதுவது, முஸ்லிம் மக்களின் அரசியல் விழிப்புணர்வையும் 2024 தேர்தல் தீர்ப்பின் ஆழத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகும். முஸ்லிம் மக்களின் உண்மையான அரசியல் எதிர்பார்ப்பு, தனிநபர் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதா அல்லது இன–மத உணர்வுகளைத் தூண்டுவதா என்பதல்ல.

சம உரிமை, நீதியான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, தகுதியை அடிப்படையாகக் கொண்ட வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் நிம்மதியான எதிர்காலம் என்பதே அதன் மையமாக இருக்க வேண்டும். இதுவே பழைய அரசியல் சித்துவிளையாட்டுகளுக்கும் புதிய அரசியல் மாற்றத்திற்குமான அடிப்படை வேறுபாடாகவும் உள்ளது.

அந்த வகையில், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள், இலங்கையின் பாரம்பரிய இன–மத அடிப்படையிலான வாக்கு அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தின. தேசிய மக்கள் சக்தி (NPP) சிங்களப் பெரும்பான்மை வாக்குகளை மட்டுமன்றி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவையும் பெற்றது. இதன் உச்சமாக, 2024 பாராளுளுமன்றத் தேர்தலில் NPP 159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த மாற்றம், நீண்டகாலமாக குறிப்பிட்ட இன அல்லது மத சமூகங்களின் வாக்குகளை மையப்படுத்தி அரசியல் செய்து வந்த பாரம்பரியக் கட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க சவாலாக அமைந்தது. குறிப்பாக, முஸ்லிம் அரசியலில் நீண்டகாலமாக செல்வாக்குச் செலுத்தி வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) போன்ற கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளிட்ட தரப்புகளும், NPPயின் வளர்ந்து வரும் ஆதரவை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன.

2024 ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் பாரம்பரியத் தலைமைகளை நிராகரித்து, பெருமளவில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வாக்களித்தனர். இதனால், தங்களது இழந்த அரசியல் பலத்தை மீட்டெடுக்கவும், முஸ்லிம் வாக்குகளை மீண்டும் தங்கள் பக்கம் ஈர்க்கவும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீதான மக்கள் அதிருப்தி என்ற போர்வையில் தங்களது வழமையான அரசியல் முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

அதற்காக, பாரம்பரிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற தரப்புகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான NPP, இன–மத அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட பழைய அரசியல் அணுகுமுறைகளுக்குள் மக்கள் மீண்டும் தள்ளப்படக் கூடாது என வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இனவாத அல்லது மதவாத அரசியல் தீர்வாகாது என்றும், அவை ஜனநாயக, சமத்துவ மற்றும் சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் NPP தரப்பு வலியுறுத்துகிறது.

NPP முன்வைக்கும் “முறைமை மாற்றம்” (System Change) என்ற அரசியல் நோக்கத்தின் மையக் கருத்தும் இதுவே. இனம், மதம், மொழி அல்லது பிராந்திய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அரசின் வளங்களையும் அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கும் பழைய அரசியல் கலாசாரத்திற்குப் பதிலாக, அனைத்து குடிமக்களையும் சமமாகக் கருதி, சட்டத்தின் முன் சமத்துவம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரச நிர்வாகத்தை உருவாக்குவதே அதன் நீண்டகாலக் கொள்கைத் திட்டமிடலாகும்.

எப்படியாவது ஜனாதிபதிக்கும் NPP அரசுக்கும் எதிரான ஆதரவை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது இயல்பான அரசியல் போட்டியின் ஒரு பகுதியாக இருந்தாலும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிட்ட உணர்வுரீதியான பிரச்சினைகளை முன்னிறுத்தி, அந்த சமூகத்தின் வாக்குகளை மீண்டும் தங்களது அரசியல் அணிகளுக்குள் கொண்டுவரும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துகின்றனர்.

ஆனால், தற்காலத்தில் நவீன ஊடக வலையமைப்புக் கலாசாரத்தை உள்ளங்கைகளில் வைத்திருப்பவர்களாகவும், நாலும் கற்றறிந்தவர்களாகவும் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்கள், இன அல்லது மத அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பிரதிநிதித்துவத்தைவிட, ஊழல் எதிர்ப்பு, நல்லாட்சி, பொருளாதார மீட்சி, சமத்துவம், ஒருங்கிணைந்த இலங்கைத் தேசம் மற்றும் அரசியல் மாற்றம் போன்ற பொதுவான தேசியக் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியலுக்கான இடத்தையே தங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான வெற்றியாகப் பார்க்கின்றனர்.

ஊழல்வாதிகளும், கள்வர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஏகோபித்த மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் இடம் பெறும் நேர்மையான, சுயாதீனமான சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், முதற்கட்டமாக அவர்கள் மறைந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதுவே தற்போது எதைக் கூறியாவது ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைத் திருப்பிவிட முயற்சிக்கும் அரசியல் வித்தையாக உள்ளது.

ஆனால், நான்கு தசாப்தங்களில் இந்த முஸ்லிம் சமூகம் கடந்து வந்த அரசியல் அதிகார மாற்றங்களிலிருந்தும், கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்தும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைத் திருப்பிவிட முயற்சிக்கும் அரசியல் தலைமைகள் யார், எதற்காக, யாருக்காக என்பதிலான விடயத்தில் வடக்கு–கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகமும் இளைஞர்களும் தெளிவாகப் பயணிக்கின்றார்கள் என்பதே முஸ்லிம் புத்திஜீவிகளின் பார்வையாக உள்ளது.

இதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்பதை ஆணித்தரமாக நாட்டின் மூவின மக்களுக்கும் தெளிவுபடுத்தும் வகையில், பிரமாண்டமான கூட்டங்கள், அரச நிறுவனங்கள், தொழிற்சங்க அமைப்புகள், புத்திஜீவிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறிவருவது மீண்டும் ஒரு புதிய அரசியல் அலையை தோற்றுவித்துள்ளது.

அஹமட் இர்ஷாட்
18-09-2026

முஸ்லிம் சமூகத்தை அரசுக்கு எதிராக திசைதிருப்புவது யார்.? அவ்வாறு செய்வதன் பின்னணி என்ன.?
මුස්ලිම් ප්‍රජාව රජයට එරෙහිව හරවන්නේ කවුද? එසේ කිරීමේ පසුබිම කුමක්ද?

දිගු කලක් තිස්සේ මහජන ඡන්දය තම දේශපාලන ශක්තිය ලෙස සැලකූ බොහෝ දේශපාලනඥයන් පසුගිය වසර දෙක තුළ මැතිවරණ වශයෙන් පසුපසට තල්ලු වී ඇත. 
ඇතැමුන් මුස්ලිම් ප්‍රජාවගේ දේශපාලන ක්ෂේත්‍රයේ පෙර තිබූ බලපෑම නැති කරගෙන ගෙදර යැව්වා.

නැතිවී ගිය දේශපාලන ශක්තිය යළි ලබා ගැනීමටත් මුස්ලිම් ඡන්ද තම පැත්තට ආකර්ශනය කර ගැනීමටත් ආණ්ඩුව කෙරෙහි ජනතා අප්‍රසාදයට මුවා වී විපක්ෂයේ පක්ෂ සුපුරුදු දේශපාලන මුහුණුවර පෙන්වීමට පටන් ගෙන තිබේ.
++++++++++++++++++

2024 දී අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලය (NPP) බලයට පත්වීමට පෙර, විශේෂයෙන් උතුරු-නැගෙනහිර පළාත් කේන්ද්‍ර කර ගත් මුස්ලිම් දේශපාලනය සමාජ අයිතීන් සහ ජනතාවගේ සැබෑ අවශ්‍යතා නියෝජනය කිරීමට වඩා පුද්ගලික දේශපාලන බලපෑම්, බල ගනුදෙනු සහ ආර්ථික අවශ්‍යතා සඳහා දේශපාලන කෙළිබිමක් බවට පත් වූ බවට දීර්ඝ කාලයක් තිස්සේ චෝදනා එල්ල විය. එය මුස්ලිම් ප්‍රජාවගේ දේශපාලන අභිලාෂයන්ට තථ්‍ය ප්‍රතිවිරෝධයක් ලෙස ද සැලකේ.

1980 දශකයෙන් පසු ඇති වූ මේ දේශපාලන සංස්කෘතිය තුළ, එනම් පසුගිය දශක හතර තුළ ආගමික හා සංස්කෘතික හැඟීම් ඇවිස්සීම, දේශපාලන අරමුණු සඳහා ජනතාවගේ මනෝභාවය වෙනස් කිරීම, භූමිය මත පදනම්ව සමාජය බෙදීම, ජාතික පක්ෂ සමඟ කේවල් කිරීම, ඇමැති ධුර සහ බලතල සඳහා ජාතික පක්ෂ සමඟ කේවල් කිරීම වැනි උපාය මාර්ග ක්‍රියාත්මක වූ බවට විවේචන එල්ල විය.

දේශපාලන බලපෑම් මත රජයේ පත්වීම් සහ සම්පත් වංචා කිරීම, කුසලතා හා තරඟ විභාග නොසලකා හැරීම සහ දේශපාලන හිතවතුන්ට සහ හිතවතුන්ට අවස්ථා නිර්මාණය කිරීම, මුදල් මාරුවීම් සමඟ එවැනි පත්වීම් සම්බන්ධ කර දේශපාලන වාසි ලබා ගැනීම වැනි චෝදනා ද මේ සමඟ සාක්ෂි සහිතව ඉදිරිපත් කෙරිණි. මේ අනුව, රජයේ රැකියා ජනතා සේවයට වඩා දේශපාලන බලපෑම් පවත්වාගෙන යාමේ මෙවලමක් ලෙස විවේචනයට ලක්ව ඇත.

එසේම දේශපාලන සබඳතා හරහා දැවැන්ත සංවර්ධන ව්‍යාපෘති වාණිජකරණය, ඉදිකිරීම් කොන්ත්‍රාත්තු, බලය යොදාගෙන රජයේ ඉඩම් ඥාතීන්ගේ හෝ ප්‍රොක්සිවරුන්ගේ නමට පැවරීම, ව්‍යාජ හෝ අධික ආයෝජන ව්‍යාපෘති නමින් රජයේ ඉඩම් දිගුකාලීන බදුවලට ලබා ගැනීම වැනි ක්‍රම මගින් රජයේ සම්පත් පෞද්ගලික දේපළ බවට පත් කිරීමට ගත් උත්සාහයන් පිළිබඳවද සනාථ වූ චෝදනා එල්ල විය.

දේශපාලන බලයෙන්, රජයේ ආයතනවල සුදුසුකම් නොලබන පවුලේ සාමාජිකයින්ට සහ හිතවතුන්ට තනතුරු ලබා දීම, ජනතා බදු මුදලින් ඉදිකරන ලද පොදු ගොඩනැගිලිවල පුද්ගලයන්ගේ නම් ලියා දේශපාලන ප්‍රචාරණය කිරීම, පවුලේ සාමාජිකයන්ට අමාත්‍යාංශවල සහ රාජ්‍ය ආයතනවල ලේකම්, විශේෂ ලේකම්, රියදුරු, ලේකම් වැනි තනතුරු ලබා දීම, රජයේ මුදලින් මාසික වැටුප් වශයෙන් අඛණ්ඩ ප්‍රතිලාභ ලබා ගැනීම ද ඔවුන්ගේ දේශපාලන සංස්කෘතියේ කොටසක් විය.

එවැනි දේශපාලන භාවිතයන්ට එරෙහිව ජනතාව 2024 දී නව දේශපාලන වෙනසක් තෝරා ගත්තා. ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ NPP ජනවාර්ගික, ආගමික සහ ප්‍රාදේශීය අනන්‍යතා අභිබවා සමානාත්මතාවය, නීතියේ ආධිපත්‍යය, කුසලතාව, විනිවිදභාවය, වගවීම සහ දූෂණය පිටුදැකීම ප්‍රවර්ධනය කරමින් "පද්ධති වෙනසක්" දේශපාලන මෙහෙවරක් ඉටු කළේය.

මේ වෙනස නිසා දශක ගණනාවක් පුරා පැවති පුද්ගලවාදී දේශපාලනයේ බලපෑම විශේෂයෙන් උතුරු-නැගෙනහිර ප්‍රදේශය තුළ සැලකිය යුතු ලෙස අඩු වී ඇත. මහජන ඡන්දය තම පෞද්ගලික දේශපාලන ශක්තිය ලෙස බොහෝ කලක සිට සැලකූ බොහෝ දේශපාලඥයන් මැතිවරණ වශයෙන් පසුබෑමට ලක් වූ අතර ඇතැමුන් ගෙදර යවනු ලැබුවේ මුස්ලිම් ප්‍රජාවගේ දේශපාලන ක්ෂේත්‍රයේ පෙර පැවති බලපෑම අහිමි කරමිනි.

මේ අනුව 2024 පාර්ලිමේන්තු මැතිවරණයේදී NPP ට එරෙහිව දේශපාලන ව්‍යාපාර මෙහෙයවමින් පාර්ලිමේන්තුවට පිවිසි ඇතැම් මුස්ලිම් පුද්ගලවාදී දේශපාලන බලවේග නව දේශපාලන අභියෝගයකට මුහුණ දී සිටී. දූෂණයට සහ දේශපාලන පක්ෂග්‍රාහීත්වයට එරෙහිව සටන් කිරීමට එන්පීපී දරන ප්‍රයත්නයන් එහි පැරණි දේශපාලන බලපෑම තවදුරටත් දුර්වල කළ හැකි වුවද, ආගමික හැඟීම් සහ සමාජ භීතීන් දේශපාලන මෙවලම් ලෙස භාවිතා කිරීම විවේචනයට ලක්ව ඇත.

නමුත් 2024 දී මුස්ලිම් ජනතාව ඇතුළු රට පුරා ජනතාව දෙන ඡන්දය පක්ෂයකට දෙන ඡන්දයක් ලෙස සැලකිය යුතු නැහැ. එය පැරණි දේශපාලන සංස්කෘතියට එරෙහිව සහ දූෂණයට, බල ගනුදෙනුවලට, පවුල් ආධිපත්‍යයට, රාජ්‍ය සම්පත් අවභාවිතයට සහ වාර්ගික-ආගමික මත පදනම් වූ බෙදුම්වාදී දේශපාලනයට එරෙහිව වෙනසක් සඳහා වූ ජනප්‍රිය තීන්දුවක් විය.

එබැවින් කල්ලිවාදී දේශපාලන ක්‍රීඩාවලින් ජනතා තීන්දුව යළිත් වෙනස් කළ හැකි යැයි කිසිවකු සිතන්නේ මුස්ලිම් ජනතාවගේ දේශපාලන අවබෝධය සහ 2024 මැතිවරණ තීන්දුවේ ගැඹුර අවතක්සේරු කිරීමකි. මුස්ලිම් ජනතාවගේ සැබෑ දේශපාලන අපේක්ෂාව පුද්ගල දේශපාලන බලය රැකගැනීම හෝ වාර්ගික ආගමික හැඟීම් ඇවිස්සීම නොවේ.

එහි අවධානය යොමු විය යුත්තේ සමාන අයිතිවාසිකම්, සාධාරණ පාලනයක්, දූෂණයෙන් තොර පාලනයක්, කුසලතා මත පදනම් වූ අවස්ථා සහ එක්සත් ශ්‍රී ලංකාවක් තුළ සාමකාමී අනාගතයක් සඳහා ය. පැරණි දේශපාලන ක්‍රීඩා සහ නව දේශපාලන විප්ලවය අතර ඇති මූලික වෙනස මෙයයි.

ඒ අර්ථයෙන් ගත් කල, 2024 ජනාධිපතිවරණය සහ පාර්ලිමේන්තු මැතිවරණය ශ්‍රී ලංකාවේ සම්ප්‍රදායික වාර්ගික-ආගමික ඡන්ද දේශපාලනයේ සැලකිය යුතු වෙනසක් සනිටුහන් කළේය. ජාතික ජන බලය (NPP) බහුතර සිංහල ඡන්ද පමණක් නොව, උතුරු නැගෙනහිර ජීවත් වන දෙමළ සහ මුස්ලිම් ජනතාවගේ සැලකිය යුතු සහයෝගයක් ද දිනා ගත්තේය. එය මුදුන් පමුණුවා ගැනීම සඳහා 2024 පාර්ලිමේන්තු මැතිවරණයෙන් NPP ආසන 159ක් ලබා ගනිමින් ඓතිහාසික ජයග්‍රහණයක් වාර්තා කළේය.

නිශ්චිත වාර්ගික හෝ ආගමික ප්‍රජාවන්ගේ ඡන්ද ඉලක්ක කර ගනිමින් දීර්ඝ කාලයක් දේශපාලනීකරණය වූ සම්ප්‍රදායික පක්ෂවලට මෙම මාරුව සැලකිය යුතු අභියෝගයක් එල්ල කරයි. විශේෂයෙන්ම, මුස්ලිම් දේශපාලනයේ දිගු කලක් බලපවත්වන ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසය (SLMC) සහ සමස්ත ශ්‍රී ලංකා මහජන කොංග්‍රසය (ACMC) වැනි පක්‍ෂ මෙන්ම එක්සත් ජනතා ශක්ති (SJB) සහ ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ (SLPP) වැනි ප්‍රධාන විරුද්ධ පක්ෂ ද NPP වර්ධනය වන සහයෝගයට එරෙහිව විවිධ දේශපාලන ක්‍රියාමාර්ග ගනිමින් සිටිති.

2024 ජනාධිපතිවරණයේදී සහ පාර්ලිමේන්තු මැතිවරණයේදී උතුරු නැගෙනහිර ඇතුළුව රට පුරා මුස්ලිම් ඡන්දදායකයින් ඔවුන්ගේ සාම්ප්‍රදායික නායකත්වය ප්‍රතික්ෂේප කර ජාතික ජන බලයට (NPP) විශාල ලෙස ඡන්දය ප්‍රකාශ කළහ. මේ අනුව තමන්ට අහිමි වූ දේශපාලන ශක්තිය යළි ලබා ගැනීමටත් මුස්ලිම් ඡන්ද යළි තම පැත්තට ආකර්ශනය කර ගැනීමටත් ආණ්ඩුව කෙරෙහි ජනතා අප්‍රසාදයට මුවා වී විපක්ෂයේ පක්ෂ තම සුපුරුදු දේශපාලන මුහුණුවර පෙන්වීමට පටන් ගෙන තිබේ.

ඒ සඳහා සාම්ප්‍රදායික මුස්ලිම් දේශපාලන පක්ෂ සහ එක්සත් ජනතා ශක්ති (SJB) සහ ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ (SLPP) වැනි ප්‍රධාන විරුද්ධ පක්ෂ ජාතික ජන බලයට එරෙහිව දේශපාලන පියවර ගනිමින් සිටී.

මෙහිදී අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ NPP අවධාරණය කරන්නේ ජනවාර්ගික-ආගමික අනන්‍යතා මත පදනම් වූ පැරණි දේශපාලන ආකල්ප වෙත නැවත ජනතාව බල නොකළ යුතු බවයි. විශේෂයෙන්ම NPP පාර්ශ්වය අවධාරනය කරන්නේ මුස්ලිම් ජනතාව මුහුණ දෙන ගැටළු වාර්ගික හෝ නිකායික දේශපාලනයෙන් විසඳිය නොහැකි බවත්, ප්‍රජාතන්ත්‍රවාදී, සමානාත්මතා සහ නීතිය මත පදනම් වූ පාලනයකින් විසඳිය යුතු බවත්ය.

NPP විසින් ඉදිරිපත් කරන ලද "පද්ධති වෙනස" දේශපාලන අරමුණෙහි කේන්ද්‍රීය සංකල්පය මෙයයි. එහි දිගුකාලීන ප්‍රතිපත්ති න්‍යාය පත්‍රය වන්නේ ජාතිය, ආගම, භාෂාව හෝ ප්‍රාදේශීය අනන්‍යතාව මත පදනම්ව රාජ්‍ය සම්පත් හා බලය බෙදා හැරීමේ පැරණි දේශපාලන සංස්කෘතිය වෙනුවට සියලු පුරවැසියන්ට සමාන ලෙස සැලකීම සහ නීතිය ඉදිරියේ සමානාත්මතාවය, විනිවිදභාවය, වගවීම සහ මහජන සුබසාධනය මත පදනම් වූ රාජ්‍ය පාලනයක් ඇති කිරීමයි.

කෙසේ හෝ ජනාධිපතිවරයාට සහ එන්.පී.පී රජයට එරෙහිව සහයෝගයක් ගොඩනගා ගැනීමට විරුද්ධ පක්ෂ උත්සාහ කිරීම සාමාන්‍ය දේශපාලන තරඟයක කොටසක් වන අතර, විශේෂයෙන් මුස්ලිම් ප්‍රජාවගේ විශේෂිත චිත්තවේගීය ප්‍රශ්න ඉස්මතු කරමින් එම ප්‍රජාවගේ ඡන්ද නැවත ඔවුන්ගේ දේශපාලන තත්ත්වයට ගෙන ඒමේ උත්සාහය ඔවුන් තීව්‍ර කරයි.

නමුත් වර්තමානයේ නූතන මාධ්‍ය ජාල සංස්කෘතිය අතේ තබාගෙන හොඳින් උගත් මුස්ලිම් ප්‍රජාවේ තරුණ තරුණියන්ට වාර්ගික හෝ ආගමික අනන්‍යතා මත පදනම් වූ දේශපාලන නියෝජනයකට වඩා දූෂණ විරෝධී, යහපාලනය, ආර්ථික ප්‍රකෘතිය, සමානාත්මතාවය, ඒකීය ශ්‍රී ලාංකීය ජාතියක්, දේශපාලන වෙනසක් වැනි පොදු ජාතික ප්‍රශ්න අවධාරණය කරන දේශපාලනයට තැනක් දක්නට ලැබේ.

එකමුතු ජනතා සහයෝගයෙන් බලයට පත්වන අවංක ස්වාධීන නීතියක ග්‍රහණයෙන් දූෂිතයන්ට දූෂිතයන්ට සහ ඔවුන්ගේ සහචරයන්ට ගැලවීමට නම් පළමුව ඔවුන්ට සැඟවී ජීවත්වීමට පරිසරයක් නිර්මාණය කළ යුතුය. ඒ ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ජාතික ජන බලයට එරෙහිව මුස්ලිම් ප්‍රජාව හැරවීමේ දේශපාලන උපක්‍රමයක්.

කෙසේ වෙතත්, දශක හතරක් තුළ මෙම මුස්ලිම් ප්‍රජාව සිදු කළ දේශපාලන බල පෙරළියෙන් සහ උගත් පාඩම්වලින්, ජාතික ජන බලයට එරෙහිව මුස්ලිම් ප්‍රජාව හැරවීමට උත්සාහ කරන දේශපාලන නායකයින් කවුරුන්ද, ඇයි සහ කා වෙනුවෙන්ද යන ප්‍රශ්නය තුළ උතුරු-නැගෙනහිර ඇතුළු දිවයිනේ සෑම ප්‍රදේශයකම වෙසෙන මුස්ලිම් ප්‍රජාව සහ තරුණ තරුණියන් පැහැදිලිවම ගමන් කරමින් සිටින බව මුස්ලිම් බුද්ධිමතුන්ගේ අදහසයි.

කිසිදු වෙනසක් සිදු නොවන බව රටේ ජනතාවට පැහැදිළි කිරීම සඳහා මහා ජනහමු, රාජ්‍ය ආයතන, වෘත්තීය සමිති, විද්වතුන්, දෙස් විදෙස් රාජ්‍ය තාන්ත්‍රිකයන් ආදී විවිධ පාර්ශ්වයන් සහභාගි වන උත්සවවලදී අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා යළිත් නව දේශපාලන රැල්ලක් නිර්මාණය කර තිබේ.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
18-09-2026
සිංහල පරිවර්තනය සමග) முஸ்லிம் சமூகத்தை அரசுக்கு எதிராக திசைதிருப்புவது யார்.? அவ்வாறு செய்வதன் பின்னணி என்ன.? Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.