"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய நிகழ்வில் காத்தான்குடி நகர சபைக்கு கடற்கரை துப்புரவு செய்யும் நவீன இயந்திரம் கையளிக்கப்பட்டது.
"கிளீன் ஸ்ரீலங்கா" வின் " அத்தம"
ஒற்றுமையாக ஒன்றிணைவோம் - கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான தேசிய நிகழ்வு பாணந்துறை பீச் பார்க்கில் இன்று (19/09/2006) காலை 7:30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கிளீன் ஶ்ரீ லங்கா செயலகம் , சுற்றாடல் அமைச்சு மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில்
சர்வதேச கரையோர சுத்தபடுத்தல் தின தேசிய வேலைத்திட்டமும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினையும் ( செப்டம்பர் 19 முதல் 25 வரை) உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட 5 உள்ளூராட்சி சபைகளுக்கு கடற்கரையினை துப்புரவு செய்யும் நவீன இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாச்சி, கிளீன் ஶ்ரீ லங்கா செயலகத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான பொறியியலாளர் சுகீஷ்வர , கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் கலாநிதி சமந்த குணசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்..
மேலும் பாணந்துறை நகர சபை, திருக்கோணமலை மாநகர சபை , காத்தான்குடி நகர சபை , பொத்துவில் பிரதேச சபை, கோறளைபற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கடற்கரை துப்புரவு செய்யும் Beachtech நவீன இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வியந்திரமானது காத்தான்குடி நகர சபை சார்பாக கெளரவ நகர முதல்வர் SHM.அஸ்பர் JP அவர்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் , திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இறுதியில் பாணந்துறை கடற்கரையை சுத்திகரிக்கும் நிகழ்வில் முப்படையினர் உள்ளிட்ட அரச அரசார்பற்ற நிறுவனங்கள் பங்குபற்றியிருந்ததுடன், கெளரவ நகர முதல்வர் உள்ளிட்ட குழுவினரும் பங்குபற்றினர்.
சுற்றுலாத்தளமாக மாறி வரும் காத்தான்குடி நகர சபையின் கடற்கரையை அழகுபடுத்தும் முகமாக நகர சபையால் முன் வைக்கப்பட்ட இந்த திட்டமுன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு குறித்த நவீன இயந்திரம் இன்றைய தினம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய நிகழ்வில் காத்தான்குடி நகர சபைக்கு கடற்கரை துப்புரவு செய்யும் நவீன இயந்திரம் கையளிக்கப்பட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2026
Rating:











கருத்துகள் இல்லை: