Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

“மீண்டெழ முடியாத மொட்டு கட்சி மஹிந்தவை காட்சிப்பொருளாக்கியுள்ளது”


 
மீண்டெழ முடியாத நிலையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மஹிந்த ராஜபக்ச மரணித்தால் அவரின் சடலத்தை வைத்தும் அரசியல் நடத்தும் நிலைக்கு வந்துள்ளது.” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ மஹிந்த ராஜபக்ச வயோதிப மனிதர். அவரை மதிக்கின்றோம்.  அவரை மேடையேற்றியபோது அவரின் உடல்நிலையைக் கண்டு கவலை ஏற்பட்டது.

மொட்டு கட்சி 2.50 என்ற நிலைக்கு விழுந்துள்ளது. அவர்களுக்கு எதையும் வைத்து அரசியல் நடத்த முடியாத நிலையே உள்ளது. அக்கட்சியினரால் மீண்டெழ முடியாது.

அதனால்தான் மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்தி அரசியல் நடத்துகின்றனர். மஹிந்த ராஜபக்ச நீடுழி வாழ வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

சிலவேளை மஹிந்த ராஜபக்ச மரணித்தால்கூட , அவரின் சடலத்தை வைத்தேனும் இவர்கள் அரசியல் நடத்துவார்கள். இப்படியானவர்கள்தான் எமது ஆட்சியை பற்றி கதைக்கின்றனர். 

எமது ஜனாதிபதியின் ஒரு தும்மலுக்குகூட இவர்கள் தாக்குபிடிக்க முடியாது.” – என்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.

“மீண்டெழ முடியாத மொட்டு கட்சி மஹிந்தவை காட்சிப்பொருளாக்கியுள்ளது” Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.