சுகீஸ்வர பண்டார கைது
சுகீஸ்வர பண்டார கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி வகித்த, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான நடப்பு விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்குரிய சம்பளம் மற்றும் மேலுமொரு அரச பதவிக்குரிய சம்பளம் என இரண்டு சம்பளங்களை அவர் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
சுகீஸ்வர பண்டார கைது
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 18, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 18, 2026
Rating:

கருத்துகள் இல்லை: