Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பாராளுமன்றத்தைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குக! கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்.


நாட்டில் தற்போது தொடர்ந்து பெருகும் முரண்பாடுகளைக் களையவும் அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையை நீக்கவும் உடனே பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையே  முன்னாள்  ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரித்துள்ளார். 


அவரது அக் கருத்தை நான் பத்திரிக்கையில் பார்த்தேன் .அவரது இக்கருத்தை நான் நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன். அத்தோடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் கோரிக்கையும் முன் வைக்கிறேன்.


இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட். தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-


நாட்டில் தற்போது  தோன்றியுள்ள விடயங்களுக்கு தீர்வுகான மக்கள் அரங்கிற்கு செல்வதே  முக்கியமானதாகும். 


எனவே அரசு பாராளு மன்றத்தை கலைத்து தேர்தலுக்குச்  செல்ல வேண்டும்.  அதற்கும் முடியாவிட்டால். விகிதசாரதேர்தல் முறைமையின் படி மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தி மக்களின் கருத்தை தெரிந்து கொள்வேண்டும். 


மாகாண சபை தேர்தலை உடன் நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து நிறைவேற்றுவதன் மூலமாக  இரண்டு வாரங்களில் தேர்தலுக்கு செல்ல முடியும். இன்று நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜனநாய முறைமையிலான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல்கள் காலதாமதப்படுத்தப்படுவதாகும்.


இன்று நாட்டின் பொருளாதாரம் அதல  பாதாளத்தில் விழ்ந்துள்ளது, பங்கு சந்தை பாரிய பின்னடைவை கண்டு வருகின்றது. இந்நிலை தொடருமானால் மக்கள் பெரும்  கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இந்நிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு மாற்றி அமைக்கவேண்டும்.- என்றார்.

பாராளுமன்றத்தைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குக! கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 12, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.