பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.
நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற அதிகாரங்கள் ஊடாக தீர்வுகானவும் எமது சமூகத்திற்கு நல்லதொரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக பொறியியலாளர்
அப்துர் றஹ்மான் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆகியோர் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நேரடியாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்.,,,,,
கடந்த கால தேர்தல் நகர்வுகளை கவனத்தில் கொண்டு நாங்கள் பரஸ்பரம் பல விட்டுக் கொடுப்புகளுடன் இந்த (2020 பாராளுமன்ற தேர்தலை ) முகம் கொடுக்க வேண்டும் என்பதுடன் சவால்கள் நிறைந்த இந்த தேர்தல் ஊடாக நல்லதொரு தலைமைத்துவங்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்கின்ற அடிப்படையிலும் இந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் படி எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.
ஆகவே மேலும் தொடர்ச்சியான பல சுற்றுப்பேச்சு வார்த்தைகளை நடாத்துவது ஊடாக ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து எதிர்காலத்தில் நல்லதொரு தலைமைத்துவத்தை உருவாக்கின்ற ஒரு விடயத்திற்கு நாங்கள் பூரனமான ஆதரவினை கொடுத்து அந்த தலைமைத்துவத் தினை உருவாக்குவதன் ஊடாக குறிப்பாக 21/4 சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழலில் காத்தான்குடியை நோக்கி இருக்கின்ற பல சவால்களை முகம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் இவ்வாறான ஒரு தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதி எமது சமூகத்தின் ஒட்டுமொத்த விடயங்களையும் நல்ல முறையில் முன்கொண்டு செல்வதோடு தேசியத்திலும் சமூகம் சார்ந்த விடயங்களை பேசக் கூடிய, சமூகத்தின் உரிமைகளைப்பற்றி விவாதிக்கக் கூடியவர்களை உருவாக்க வேண்டும் என்ற ரீதியிலும் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
எனவே இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் இது தொடர்பில் நல்ல தீர்வுகள் எட்டப்படும் என்பதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் காத்தான்குடியில் பல்முனைப் போட்டிகளைத் தவிர்த்து நல்ல தொரு சுமூகமான ஒரு சூழலின் ஊடாக எமது பிரதிநிதியை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயல்திட்டத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 28, 2020
Rating:

கருத்துகள் இல்லை: