Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அகில இலங்கை ஹைஅதுல் குர்ஆனில் கரீம் அமைப்பின் முதலாவது கிளை காத்தான்குடியில் ஆரம்பம்


சுமார் 19 ஆண்டுகளாக கொழும்பு நகரை மையமாகக் கொண்டு அல் குர்ஆன் கல்வி, தஜ்வீத் பயிற்சி, ஹிப்ழ் மேம்பாடு, இஜாஸா, றிவாயத் மற்றும் உலமாக்கள் வழிநடத்தும் கல்வி நடவடிக்கைகள் மூலம் நாடளாவிய ரீதியில் சிறப்பாக இயங்கி வரும் அகில இலங்கை ஹைஅதுல் குர்ஆனில் கரீம் அமைப்பின் முதலாவது கிளை, கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு காத்தான்குடியில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது சமூகத்திற்கு மகிழ்ச்சியூட்டும் முக்கியமான செய்தியாகும்.


இந்த புதிய கிளை காத்தான்குடி ஊர்வீதியில் அமைந்துள்ள ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.


கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அல் குர்ஆன் கல்வியை மேலும் ஒழுங்குபடுத்தி, தரநிலையுடனும் ஒருங்கிணைப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.



12.02.2026 வியாழக்கிழமை மதியம், கொழும்பிலுள்ள ஹைஅதுல் குர்ஆன் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இக்கிளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் சிறப்பாக கைச்சாத்திடப்பட்டது.


இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் அஷ் ஷெய்க் MIM. ரிஸ்வி முப்தி, செயலாளர் அஷ் ஷெய்க் TM. சல்மான் (தப்லீகி, பின்னூரி), அதிபர் அஷ்ஷெய்க் செளமி கரீம் (றஷாதி), அஷ்ஷெய்க் M.J.அப்துல் ஹாலிக் (தேவ்பந்தி), அல் காரி MHM.பிர்தவ்ஸ் (புர்கானி), மெளலவி NTM. லரீப் (புஹாரி) ஆகியோரும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி சார்பில் அதன் அதிபர் அஷ்ஷெய்க் ASM.பாறூக் (அல் பலாஹி,அல் அஸ்ஹரி), உப செயலாளர் அஷ் ஷெய்க் MMM. இல்ஹாம் (பலாஹி), பொருளாளர் அல் ஹாஜ் கலீல் (பிலால் ஹாஜியார்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்பாடநெறி
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஷவ்வால் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் மிக விரைவில் கோரப்படவுள்ளன.

இப் பாடநெறிக்கு அல்-ஆலிம் மற்றும் அல்-ஹாபிழ் ஆகிய இரு சான்றிதழ்களும் பெற்றவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தஜ்வீத், ஹிப்ழ் தரநிலை மதிப்பீடு, குர்ஆன் கற்பித்தல் முறை, கிறாஅத் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் விரிவான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள மத்ரஸாக்கள், அறபுக் கல்லூரிகள் மற்றும் ஹிப்ழ் பீடங்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். 

அல் குர்ஆன் கல்வியை ஒருங்கிணைத்து, திறமையான குர்ஆன் ஆசிரியர்கள் மற்றும் ஹாபிழ்களை உருவாக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

இது கல்வி வளர்ச்சிக்கான ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; மாறாக, அல் குர்ஆன் சேவையை மையமாகக் கொண்ட ஒரு நீண்டநாள் பார்வையின் தொடக்கமாகும்.

 அல்லாஹ்வின் அருளாலும், சமூகத்தின் ஒத்துழைப்பாலும் இம்முயற்சி வெற்றிகரமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். பாறூக் (அல் பலாஹி,அல் அஸ்ஹரி)
அதிபர் 
0772434586

அஷ் ஷெய்க் எம்.எம்.எம். இல்ஹாம் (பலாஹி) BA, 
உப செயலாளர்
0777270387

தகவல்
அதிபர் 
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி,
காத்தான்குடி
கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அகில இலங்கை ஹைஅதுல் குர்ஆனில் கரீம் அமைப்பின் முதலாவது கிளை காத்தான்குடியில் ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.