இலங்கை பொலிஸிற்கு 556 மில்லியன் பெறுமதிவாய்ந்த நவீன உபகரணங்கள்

இலங்கை பொலிஸிற்கு ரூபாய் 556 மில்லியன் செலவில், நவீன வேகமானி உபகரணங்கள், கணினிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் /நகல் இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (18) உத்தியோகபூர்வமக கையளித்தார்.
இதற்கமைய, ரூ. 365 மில்லியன் செலவில் 1,718 கணினிகள், ரூ. 129 மில்லியன் செலவில் 575 நகல் எடுக்கும் இயந்திரங்கள், ரூ. 45 மில்லியன் செலவில் வேகமானிகள் மற்றும் ரூ. 17 மில்லியன் செலவில் 1,750 யுபிஎஸ் (UPS) இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டன.
சமீபத்திய வரலாற்றில் பெலிஸாருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உபகரணதை் தொகைகள் இவையாக கருதப்படலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டதனூடாக...
- வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் - நவீன வேகமானி உபகரணங்களைப் பயன்படுத்தி போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கைளை எடுக்க உதவுதல்.
-பொலிஸ் நிலையங்களில் ஆவணங்களை முகமைப்புத்தல், தரவு பாதுகாப்பு மற்றும் சேவைத் திறனை அதிகரித்தல்.
- தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்துதல் மற்றும் விசாரணை செயல்முறையை திறம்படச் செய்தல்.
- இதனூடாக, பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்கும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை திறம்படவும் எளிதாகவும் மாற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதனூடாக பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், நவீன தொழில்நுட்பத்துடன் பொலிஸ் சேவையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பொலிஸிற்கு 556 மில்லியன் பெறுமதிவாய்ந்த நவீன உபகரணங்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 19, 2026
Rating:
கருத்துகள் இல்லை: