Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் 12வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


காத்தான்குடி பிஸ்மி நிறுவனத்தின் கீழ் கடந்த 19 வருடங்களாக இயங்கிவரும் பிஸ்மி அல் குர்ஆன் பாடசாலையின் 12வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 2026.02.04 புதன்கிழமை காலை காத்தான்குடி அல்மனார்  மண்டபத்தில் இடம்பெற்றது. 


பிஸ்மி நிறுவனத்தின்  தவிசாளர் அஷ்ஷேய்க் எம்.பீ .எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையில் கற்கை நெறியைப் பூர்திசெய்த  23மாணவ மாணவிகள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


இங்கு பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை மாணவ மாணவிகளில் ஆற்றல்களை வெளிக்கொணரும் பாடசாலை கீதம், ,உரையாடல்,கஸீதாக்கள்,ஹதீஸ் போட்டிகள் மற்றும் அல்குர்ஆனிய மாநாடு, பார்வையாளர்களின் உளங்களை கவர்ந்த Bismi Reciter போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் 12வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.