இரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை
இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதால் இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹெரத் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
"இரண்டு மாத மின் கட்டணங்கள் இணைந்தால் செலுத்த வேண்டிய தொகை அதிகமாகும் என்பதே தற்போது இருக்கும் பிரச்சனை. அதனால் நாங்கள் அதைத் தவிர்க்க, கடந்த மாத கட்டண பட்டியலுக்கு இம்மாதம் சாதாரண கட்டண பட்டியல் ஒன்று வரும். ஏப்ரல் மாத இறுதியில் கட்டண பட்டியல் வழங்கும் போது சரியான கணக்கு இணையும் அப்போது.
அதாவது ஒரு மாதத்திற்கு முன்னைய மாதத்தின் கணக்கு. பிப்ரவரி மாத கணக்கு மார்ச் மாதத்தில் வருகிறது. ஏப்ரல் மாதத்தில் வருவது அப்போது இருக்க வேண்டிய பில்லின் மார்ச் மாதத்தை குறைத்து வரும் வகையில் தான் செய்கிறோம். நீங்கள் CEB வலைத்தளத்திற்குச் சென்று மீட்டர் வாசிப்பில் உங்கள் விவரங்களைச் சேர்த்தால், உங்கள் பில் எவ்வளவு என்பதைக் காணலாம்.
இந்த நேரத்தில் எங்களுக்கு பொருளாதார பிரச்சினை உள்ளது. அதனால்தான், கடந்த மாத பில் தொகையை CEB கணக்கில் செலுத்தக்கூடிய நபர்களை கிரெடிட் கார்டு மூலம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். கவுண்டர்கள் திறந்திருக்கும். அவ்வாறு செலுத்துவதாயின் நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.lnw

கருத்துகள் இல்லை: