Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பில் மரக்கறிச் செய்கைபண்ணும் விவசாயிகளை நட்டத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான விசேட செயல் திட்டம்.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களது மரக்கறி வகைகள், பழவகைகள் போன்றவற்றை நியாய விலையில் பெற்று அதனை மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களினூடாகவும் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கான துரித நடவடிக்கை இன்று (14) களுதாவளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.




கொரோனா வைரஸ் தெற்று பரவாமலிருக்க ஏற்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக மரக்கறிச் செய்கையாளர்களது உற்பத்திகள் சந்தைப்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை நட்டத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விசேட திட்டத்தின் முதல் கட்டமாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகளது மரக்கறி உற்பத்திகளை களுதாவளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மன்முனைத் தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினால் நியாய விலையில் கொள்வனவு செய்யப்பட்டது. இம்மரக்கறிகளை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், கொரோனா வைரஸ் தொற்று காரனமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அனுமதி வழங்கப்பட்ட நடமாடும் விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு நியாய விலையில் வழங்க பிரதேச செயலகங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்க அதிபர் இங்கு கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் செய்கை பண்ணப்படுகின்ற மரக்கறிவகைகள், பழவகைகளையும் உற்பத்தியாளர்கள் இப் பொறுளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் எனவும், மலை நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பீற்றூட் கிழங்கு எமது மாவட்டத்திலும் செய்கை பண்ணமுடியும் என்பதை இங்குள்ள விவசாயிகள் நிரூபித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.


மேலும் இவ்விவசாயிகளின் உற்பத்தியினைக் கொள்வனவு செய்வதற்காக மாவட்ட செயலகத்தினால் களுவாஞ்சிக்குடிப் பிரதேச செயலகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் முற்பணமாக வழங்கப்பட்டதாகவும் ஒவ்வொரு மரக்கறிவகைகளிலும் சுமார் 2 ஆயிரம் கிலோ கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார். இதனடிப்படையில் 2855 கிலோ வெண்டி, 2636 கிலோ மிளகாய், 1399 கிலோ வெள்ளைக் கத்தரி, 904 கிலோ பயற்றை, 622 கிலோ பீற்றூட், 543 கிலோ நீலக் கத்தரி, 251 கிலோ நாடை, 257கிலோ வரிப்பீக்கை போன்ற மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டது. 


இந்நிகழ்வில்; களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரட்னம், மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் எம். விநோதன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள் பிரதிநிகள் என பலரும் அற்பணிப்புடன் செயற்பட்டனர்.

மாவட்ட தகவல் அதிகாரி



மட்டக்களப்பில் மரக்கறிச் செய்கைபண்ணும் விவசாயிகளை நட்டத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான விசேட செயல் திட்டம். Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 15, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.