பேரீச்சம் பழத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முழுமையாக வரியை நீக்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
புனித ரமழான் நோன்பு மாதத்தில் பேரீச்சம் பழத்தை கொண்டு வருவதற்கு முழுமையாக வரியை நீக்கிய நமது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவுக்கு நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்
ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஹிறா பெளண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேரீச்சம் பழம் விநியோகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலில் இன்று (28) நடைபெற்ற இந்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஜவாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் ஹிறா பவுண்டேசன் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி உட்பட நகர சபை உறுப்பினர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கி வைக்கப்பட்டன.
எம் எஸ் எம் நூர்தீன்
27.02.2026
பேரீச்சம் பழத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முழுமையாக வரியை நீக்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 28, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 28, 2026
Rating:












கருத்துகள் இல்லை: