78 ஆவது சுதந்திர தினம் ICST பல்கலைக்கழகத்தில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.!
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள், பல்கலைக்கழக ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்வின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில், பல்கலைக்கழக பிரதம நிறைவேற்று அதிகாரி ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், முகாமைத்துவ இயக்குனர் ஹிபாஸ் ஹிஸ்புல்லாஹ்,
துணைவேந்தர் பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க, செயற்பாட்டு பொறுப்பாளர் ருசித விக்ரமசிங்க, பதிவாளர் பி.டி. ஹசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும், கல்வி மற்றும் நிர்வாக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சுதந்திர தினத்தை தேசிய பெருமையுடனும் தேசப்பற்றுடனும் கொண்டாடினர்.
தேசிய அடையாளம், நினைவுகள் மற்றும் எதிர்கால நம்பிக்கைகள் ஒன்றிணைந்த இந்த நிகழ்வு, இலங்கையின் பயணத்தையும் எதிர்காலக் கனவுகளையும் போற்றும் ஒரு பெருமைமிக்க நாளாக அமைந்தது.
-ஊடகப்பிரிவு-
78 ஆவது சுதந்திர தினம் ICST பல்கலைக்கழகத்தில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.!
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 05, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 05, 2026
Rating:






கருத்துகள் இல்லை: