Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

S.S.P. மஜீத் சேரின் மரணச் செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது


(U.L.M.N.முபீன்)

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரின் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு  உயர்வான ஜென்னத்துல் பிர்தவ்ஸை வழங்க பிரார்த்திக்கிறேன்.  ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். 

மஜித் சேர் இலங்கை முஸ்லிம்களின் ஒப்பற்ற சொத்து, 

குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களை மிகக் இக்கட்டான காலங்களில் அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக காப்பாற்றிய உயர் தளபதி. 

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களை தமிழ் ஈழ  விடுதலை புலிகளும் மற்றும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களும் தாக்கி கொலை செய்த காலங்களில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிய நிலையில் 

தனக்கிருந்த அரசியல் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு துறையோடு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி கிழக்கு முஸ்லிம் கிராமங்களை பாதுகாத்த உயர்ந்த வள்ளல்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் பின்னைய நாட்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து கொள்ளுகின்றார். 

நானும் அவரும் மிக நீண்ட காலம் கட்சியின் உச்ச பீட உறுப்பினராக செயற்பட்டோம்.

எப்போதும் சமூகப் பிரச்சினைகளையே பேசுவார் பல தடவைகள் சமூக விடயங்களில் கட்சிக்குள்ளே முரண்பட்டு இருக்கிறார். 

பின்னர் கிழக்கு மாகாண சபையின் ஒரு உறுப்பினராக நான் செயற்பட்ட காலங்களில் அவரும் சிறந்த உறுப்பினராக மாகாண சபையில் செயற்பட்டார்.

இலங்கை ரக்பி அணியின் தேசிய தலைவராக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்.அல்லாஹ் அவருக்கு ஜெக்ன்னத்துல் பிர்தெளஸை வழங்க மீண்டும் பிராத்திக்கிறேன். 

அவரைப் பிரிந்து துயறுற்டிருக்கும் அவர் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நிம்மதியையும் நல்ல பரக்கத்தையும் வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன். 

(பிரார்தனையுடன்
U.L.M.N.முபீன்)
S.S.P. மஜீத் சேரின் மரணச் செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.