Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முகமது நபி அவர்களை மிகவும் கொச்சைத் தனமாக எழுதிய, இந்து சகோதரர் பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.


(சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் UL.மப்றூக்)

முகமது நபி அவர்களை மிகவும் கொச்சைத் தனமாக எழுதிய, இந்து சகோதரர் ஒருவரின் பதிவொன்று சீரியஸாக உலவிக் கொண்டிருக்கிறது.

அது ஒரு முட்டாள்தனமான பதிவு என்பது நமக்கு மட்டுமல்ல, அவரின் சமூகத்தவர்களுக்கே - மிக நன்றாகத் தெரியும். 

மதம் என்பது உலகில் மிகவும் நுண்ணுணர்வு மிக்க ஒரு விடயமாகும். அப்படி இருக்க - முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கின்ற நேசிக்கின்ற முஹம்மது நபி அவர்களை, இவ்வாறு கொச்சையாக எழுதினால் என்ன நடக்கும் என்பதை, ஊகிக்க முடியாமல் எழுதிய அந்த முட்டாளை, என்னவென்று சொல்வது? 

அது ஒரு புறம் இருக்க, விடயம் சீரியஸாக மாறிக்கொண்டிருப்பதை அறிந்தவுடன் - அந்த இந்து சகோதரர் தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கோரி, ஒரு வீடியோவை வெளியிடிருக்கிறார். 

அவர் தனது தவறை உணர்ந்தாரோ அல்லது சட்டத்துக்குப் பயந்தாரோ தெரியவில்லை. ஆனால் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். 

🔴இப்போது முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? 

இல்லை உன்னை மன்னிக்கவே முடியாது - என்று சொல்லி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோமா? அல்லது "சரி மன்னிப்புக் கேட்கிறான் மன்னித்து விடுவோம்" என்று பெருந்தன்மையுடன் நடக்கப் போகிறோமா? 

முஹம்மது நபி சந்திக்காத அவமானங்களா? முஹம்மது நபி கொடுக்காத மன்னிப்புகளா? 

நாம் - நபி வழியில் அவரை மன்னிப்போம். அந்த இந்து சகோதரருக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்றுக் கொடுத்தால் அவருக்கு முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் இன்னும் கோபமான எண்ணங்களே உருவாகும். அவரை மன்னித்தார் - முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவர் கொண்டுள்ள கடுமையான போக்கும் எண்ணங்களும் சிலவேளை மாறக்கூடும். 

அதுதானே நமக்குத் தேவை.


முகமது நபி அவர்களை மிகவும் கொச்சைத் தனமாக எழுதிய, இந்து சகோதரர் பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.