Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனின் மறைவுக்கு காத்தான்குடி மீடியாபோரம் அனுதாபம்.




மூத்த ஊடகவியலாளரும் , தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கை பத்திரிகைப் பேரவையின் உறுப்பினருமான எஸ். தில்லை நாதன் ஐயா தனது 81 ஆவது வயதில் புதன்கிழமை (26) அன்று காலமானார் . அன்னாரின் மறைவுக்கு காத்தான்குடி மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ஊடகப்பணி செய்த மூத்த ஊடகவியலாளர் தில்லை நாதன், நாட்டின் சமாதானம் மற்றும் தேசிய ஜக்கியத்திற்காக தனது ஊடகப்பணியை மேற்கொண்ட ஓர் முன்மாதிரி மிக்க ஊடகவியலாளர் ஆவார்.

மூத்த ஊடகவியலாளர் தில்லை நாதன் ஐயா அரசியல் உயர் மட்டங்களுடன் தொடர்புகளை பேணி வந்ததுடன் இளம் தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் உருவாகுவதற்கும் காரணமாக செயற்பட்டார்.

மரியாதைக்குரிய எஸ்.தில்லை நாதன் ஐயா வின் மறைவு தமிழ் ஊடகத்துறையில் மீள் நிரப்ப முடியாத இடை வெளியாகும் , அவர் இவ் உலகை விட்டுப் பிரிந்தாலும் அவர் நினைவுகளும், சேவைகளும் தமிழ் ஊடக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனின் மறைவுக்கு காத்தான்குடி மீடியாபோரம் அனுதாபம். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 28, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.