வெற்றிகரமாக இடம்பெற்ற புலமை பரிசில் மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டல் கருத்தரங்கு..
2019 ஆம் வருட தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச உளவியல் வழிகாட்டல் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (28) காத்தான்குடி விம்பிள்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
முஹாசபா வலையமைப்பின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட் தலைமையில் இடம்பெற்ற இவ் உளவியல் வழிகாட்டல் கருத்தரங்கில் உளவளத்துனையாளர் எம்.எஸ்.எம்.முஹைதீன் சாலி , அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி) ஆகியோர் வளவாரர்களாக கலந்து கொண்டதுடன் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கிம் (SLEAS) அவர்கள் பிரதம அதிதியாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன் அதிகமான பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக இடம்பெற்ற புலமை பரிசில் மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டல் கருத்தரங்கு..
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 29, 2019
Rating:
கருத்துகள் இல்லை: