கல்வியால் எமது சமூகம் முன்னேற்றமடைய வேண்டும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா
-எம் .எச் .எம் .அன்வர்-
எமது மாணவர்களை கல்வியினாலே முன்னேற்றமடையச் செய்வதுடன் பயனுள்ள முறையில் கற்பதனாலேயே சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய வியாபாரம் செய்யவும் முடியும் இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் 20.07.2019 இடம்பெற்ற பெட்மின்ரன் போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விளையாட்டுத்துறை முக்கியமான ஒரு துறையாகும். வெறுமனே கல்வியை மாத்திரம் நாம் போதிக்காது விளையாட்டுடன் சேர்த்து கல்வியை போதிக்க வேண்டும்.அப்போதுதான் எமது பிள்ளைகள் தேகஆரோக்கியமுள்ள, சுகதேகியான பிள்ளைகளாக வளர்ந்து சமூகத்திற்கு பிரயோசனமுள்ள நற்பிரஜைகளாக வருவர்.
தற்போது நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம்.பிரதேச ரீதியான முறண்பாடுகள், இனரீதியான முறண்பாடுகள், சமூக ரீதியான முறண்பாடுகளை சந்தித்து வருகின்றோம்.இதற்கான தீர்வானது சிறந்த கல்வியிலேயே தங்கியுள்ளது இதற்காக பல திட்டங்களை நாம் வகுத்துள்ளோம்.
பெட்மின்ரன் போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களாகிய நீங்கள் தேசிய ரீதியிலும் வெற்றிபெறவேண்டும் என பிரார்த்திக்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்
மேற்படி நிகழ்வில் நகர சபை தலைவர் எஸ் எச் .அஸ்பர் ,பிரதேச கல்விப்பணிப்பாளர் ஏ.ஜி.எம் ஹக்கீம் முன்னாள் பிரதேச கல்விப்பணிப்பாளர் எம் ஏ சி எம் பதுர்தீன் முன்னாள்ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எம். றுஸ்வின் பாடசாலை அதிபர் ஏ. எல். சப்ரி ,ஆசிரியர்கள் மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களும் கலந்துகொண்டனர்.
கல்வியால் எமது சமூகம் முன்னேற்றமடைய வேண்டும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 23, 2019
Rating:
கருத்துகள் இல்லை: