Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சுழற்சிமுறை ஒப்பந்த மீறல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மை மற்றும் எதிர்ப்பு வலுக்கிறது


பார்வை (1)

ஆரம்பகால அரசியல் என்பது பெரும்பாண்மைக் கட்சிகளோடு முஸ்லிம்கள் இணைந்ததாக இருந்தாலும், வட-கிழக்கில் தமிழர்களின் கட்சிகளோடு இணைந்ததாக முஸ்லிம்களின் அரசியல் நகர்வுகள் இருந்தது. காலத்திற்குக்காலம் தமிழ் பேசும் மக்கள் என்ற வாசகத்திற்குள் முஸ்லிம்களின் தனித்துவம் மறைக்கப்பட்டு, தமிழர்களுக்கான தீர்வுகள், நிலப்பங்கீடு, அபிவிருத்திகளில் தமிழர்களிடம் எஞ்சியதையே முஸ்லிம்கள் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிருந்தது.

கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முஸ்லிம் தலைமைகள் தேர்தல் காலங்களில் கிழக்குக்கு வருகை தருவதும், அதன் பின்னர் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தமது தேவைகளை நிறைவேற்ற கொழும்புக்கு அலைவதுமான ஒரு காலம் இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். எமது உரிமைகளை நாம் வெல்ல வேண்டுமென்ற சிந்தனை மறைந்த அஷ்ரப் அவர்களுக்கு உருவாகி அஷ்ஷஹீட் அஹமட் லெப்பையின் ஆலோசனையில் கருக்கட்டியது முஸ்லிம் காங்கிரஸ்.

காலத்தின் தேவை, முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கேற்பட்ட நெருக்குவாரங்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற விருட்சம் காத்தான்குடியில் உதயமானது. அம்பாரை மாவட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளின் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களாலும் ஏனைய மாவட்ட பெரும்பான்மைக் கட்சிகளின் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களாலும் இக்கட்சியின் தோற்றம் பலத்த சோதனைகளுக்குட்படுத்தது.

ஆனால், மக்கள் தமக்கான ஒரு கட்சி வேண்டுமென்பதில் மிகத்தெளிவாக இருந்தார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் வட கிழக்கு தமிழ்க் கட்சிகளுக்கு பலத்த சவாலானது தமிழ் அரசியலிடம் கையேந்தி நின்ற சமூகம் தலை எழுத்தை தாமே தீர்மானிக்கின்ற அளவிலான அரசியல் சக்தியாக தோற்றம் பெறுதல் என்பது முஸ்லிம் சமுகம் மீதான அடர்ந்தேறுகின்ற செயற்பாட்டை தமிழ் அரசியல் மத்தியில் உருவாக்கியதன் விழைவு தமிழ்-முஸ்லிம் என்கின்ற இரு அடையாளப்படுத்தப்பட்ட இனங்களுக்கிடையில் புலிகளின் பங்குபற்றுதலுடன் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தது.

இந்த இன விரிசலும் புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையும் முஸ்லிம்களின் வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸின் பக்கமாக ஒன்று சேர்த்தது. இந்த ஒன்று குவிப்பு ஆளும் அரசாங்கம் யாராக இருக்க வேண்டுமென்பதை த் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியது.
இணைந்த வட கிழக்குக்கான தனது கன்னித்தேர்தலில் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் பலத்தை நிறுவியது. இதனைத்தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலில் தன் பலத்தை தேசத்திற்குக் காட்டியது மட்டுமல்லாது, தனது அசுர வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்தியது.

இப்படியாக காலத்திற்கு காலம் தன் சமூகம் சார்ந்த விடயங்களில் பல சவால்களை முறியடித்து, தனது உருவாக்க நோக்கத்தின் அடைவுகளைப் படிப்படியாக அடைய ஆரம்பித்தது. பாராளுமன்ற ஆசன வெட்டுப்புள்ளியை 5 வீதமாக மாற்றியது. இது முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற ஆசனங்களை சடுதியாக அதிகரிக்க வைத்தது.

இந்நிலையில், காத்தான்குடி, ஏறாவூர் உள்ளிட்ட மட்டக்களப்புத் தொகுதியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதிக்கமும் வாழைச்சேனை - ஓட்டமாவடி உட்பட்ட கல்குடாத் தொகுதியில் முஹைதீன் அப்துல் காதரின் ஆதிக்கமும் பலம் பெற்றது இந்தப்பலத்தை ஒற்றுமைப்படுத்தப்பட்டதாக மாற்றுவதற்கு மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் கையாண்ட மிகப்பெரிய தந்திரம் சுழற்சி முறை பிரதிநிதித்துவமாகும்.

சுழற்சியில் பல சத்திய வாக்குகளுடனான ஒப்பந்தத்துடன் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் காத்தான்குடிக்கு வழங்கப்பட்டது. உரிய காலம் நிறைவடைந்தவுடன் தாமாக முன்வந்து இராஜனாமாச் செய்வதற்குப்பதிலாக தனது வாக்குறுதிக்கும் ஒப்பந்தத்திற்கும் மாற்றமாக காத்தான்குடியைப் பிரதிநிதிப்படுத்தி பாராளுமன்றக் கதிரையில் அமர்த்தப்பட்ட ஹிஸ்புல்லாஹ், தனது வாக்குறுதிற்கு மாற்றமாக பதவி திறப்பதற்கு மறுத்தார்
இதன் விழைவு, ஓட்டமாவாடியில் இருந்த காத்தான்குடி வர்த்தகர்களின் கடைகள் சேதமாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஊர், பிரதேச வாதம் தோற்றம் பெற ஆரம்பித்தது. ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் இழக்க ஆரம்பித்தது.
ஒருவருடைய குறுகிய சிந்தனை, முனாபிக்தனம், சுயநலம் மட்டக்களப்பு முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை இல்லாமலாக்கி, அரசியல், நிர்வாக ரீதியாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மீண்டும் அரசியல் அனாதைகளாகின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறே அண்மைக்காலமாக காத்தான்குடியில் சற்று வளர்ந்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தனக்குக்கிடைத்த 3 போனஸ் ஆசனங்களை நிரப்பும் விடயத்தில் ஒரு பெண் அங்கத்தவர் அடங்கலாக இரண்டு ஆண் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விடயத்தில் எழுத்து மூலமான ஒப்பந்தத்துடன் முதல் ஒருவருடத்திற்காக வழங்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களில் ஷிப்லி பாறூக் ஒரு வருடம் நிறைவுற்றவுடன், தனது உறுப்பினர் பதவியை இராஜனாமாச் செய்ய முன்வந்தார்.
ஆனால், அடுத்த உறுப்பினரான முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைபரப்புச் செயலாளர் ULM.முபீன் இராஜினாமாச் செய்யப் பின்வாங்கியதால், அவருடைய ஆசனத்திற்காகப் பிரேகரிக்கப்படுகின்றவர் முபீனுடைய நிலைபாட்டால் தனக்குரிய ஆசனமில்லாமல் போகலாமென்ற சந்தேகத்தில் தனக்கு முதல் இராஜனாமாச் செய்பவருடைய ஆசனத்தை வழங்க வேண்டுமென்ற கருத்து முரண்பாட்டால் சுழற்சிமுறையில் அங்கத்தவர்கள் நியமிக்கும் செயற்பாடு தாமதமாகியுள்ளது.


முஸ்லிம் காங்கிரஸ் கொள்கையைத் தெளிவாகச்சொல்ல வேண்டிய முபீன், முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டிய முபீன் கட்சியை காத்தான்குடியிலிருந்து பின்னடைதற்குரிய சகல எத்தனிப்புக்களையும் செய்து வருவது மாத்திரமின்றி தான் மாத்திரம் சகல சுக போகங்களை கட்சியின் பெயரால் அனுபவிப்பது, ஆசைப்படுவது காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பினை முபீனுக்கெதிராகத் தோற்றுவித்துள்ளது. 

அப்துல் வஹாப்
காத்தான்குடி


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சுழற்சிமுறை ஒப்பந்த மீறல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மை மற்றும் எதிர்ப்பு வலுக்கிறது Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 31, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.