21வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா-2019
எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு-07 இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இவ்விழாவில் பேராசிரியர் ஜே,பீ.திஸாநாயக அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்.
இலக்கிய உலகில் நீண்ட நாட்களாய் பணிபுரிந்து வரும் சிங்கள, தமிழ் ஆங்கில மொழி இலக்கிய ஆளுமைகளான பேராசிரியர் ஜே,பீ.திஸாநாயக, பேராசிரியர் வினி விதாரண, திருமதி பத்மா சோமகாந்தன் ஆகியோருக்கு கொடகே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்படும்.
மேலும் இவ்விழாவில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கள தமிழ் ஆங்கில மொழிகளில் வெளிவந்த நாவல் சிறுகதை, கவிதை மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என பல்துறைச் சார்ந்த சிறந்த நூல்களுக்கு கொடகே விருதுகள் வழங்கப்படும்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 27, 2019
Rating:


கருத்துகள் இல்லை: