ஊடரங்கு உத்தரவில் மீண்டும் திருத்தம் - மேல்மாகாணம் 27ம் திகதிவரை முடக்கம்
ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவது குறித்து இதற்கு முதல் அறிவிக்கப்பட்டிருந்த அறிக்கை மீண்டும் திருத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய மேல்மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27ம் திகதி வரை திங்கட்கிழமை காலை 05மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 08மணி முதல் காலை 05மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும். அதற்கு மேலதிகமாக 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் முழுமையாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு உள்நுழைவது மற்றும் அங்கிருந்த வெளிவருவது அனைவருக்கும் முற்றாக தடை செய்ய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: