Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக இன்று 23 மாவட்டங்கள் வழமைக்கு திருப்பியுள்ளது அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அனேகமனவை இன்று வழமைக்கு திரும்பியுள்ளது

கொரோனா நோய் தக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டு இருந்தநிலையில் அதிகமான அரச திணைக்களங்கள் சிராக இயங்காத நிலையில் தடைப்பட்டு ஒரு சில ஊழியர்களுடன் செயல்ப்பட்டு வந்த அலுவலங்கள் மக்கள் பணிகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஏனைய திணைக்களங்கள் நியதிச்சபைகள் கூட்டுத் தாபனங்கள் ஏனைய அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ஆடைத்தொழில் சாலைகளும் மட்டக்களப்பில் இன்று செயல்ப்பட்டுவருவது அவதானிக்க முடிந்தது.


இன்று அலுவலகர்கள் கனிசமான அளவு வருகைதந்திருந்தனர் அலுவலக நுழைவாயிலில் பொதுமக்களுக்கான கைகழுவும் இடம் தயார் படுத்தப்பட்டுள்ளதுடன் வருபவர்களில் உடல் வெப்பநிலையினை பராமரிக்கின்ற சோதனைகளும் கிரமமாக நடைபெறுவதுடன் அலுவலகர்கள் சேவை நாடிகள் அனைவருக்கும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிவதும்அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.


அதிகளவான மக்கள் காணி தொடர்பான விடையங்களுக்கெ வருவது அவதானிக்கமுடிந்தது அத்தோடு சமுத்தி கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சனை களுக்கும் மக்கள் வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுகின்ற மக்களும் வைத்தியசாலைகளுக்கு செல்கின்ற மக்களையும் வெளியில் நடமாடுவதை கானலாம்.


ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் காலங்களில் மக்கள் முன்டியடித்துக்கொண்டு பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுகின்ற மக்கள் வழமைக்கு மாறாக தங்களின் நடமாட்டத்தினை குறைத்துள்ளார்கள் போன்ற உணர்வு ஏற்பட்டுளது உண்மையில் மக்கள் அனாவிசயமான விடையங்களுக்கு வெளியில் வருவதை குறைத்துக்கொள்வது அனைவருக்கும் நன்மைபயக்கும் செயலாகும்.
அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக இன்று 23 மாவட்டங்கள் வழமைக்கு திருப்பியுள்ளது அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அனேகமனவை இன்று வழமைக்கு திரும்பியுள்ளது Reviewed by www.lankanvoice.lk on மே 12, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.