33 வருட தபால் சேவையிலிருந்து ஓய்வு பெறும் சீனி முஹம்மட் முஹம்மது அப்துல் காதருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான்
எம்.ரீ. ஹைதர் அலி
வாகனேரி (காவத்தமுனை) தபாலகத்தில் கடமையாற்றிய சீனி முஹம்மட் முஹம்மது அப்துல் காதர் இன்று 06.05.2020ம் திகதியுடன் சுமார் 33 வருட கால சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இவர் தபால் அதிபராக கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக தனது கடமைகளை எமது பிரதேச மக்களுக்கு வழங்கியதையிட்டு மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார் சட்டத்தரணி ஹபீப் றிபான்.
தனது சேவைக் காலத்தில் ஓட்டமாவடி மற்றும் காவத்தமுனை பிரதேசங்களில் சிறப்பாக கடமையாற்றி அங்குள்ள மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவராக திகழ்கின்றார்.
மேலும் எமது பிரதேசத்தில் எதிர்காலங்களில் எமது முயற்சிகள் மூலம் அல்லது பொது நிருவனங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முன்வந்து பெறுமதியான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றேன் என சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்துள்ளார் .
33 வருட தபால் சேவையிலிருந்து ஓய்வு பெறும் சீனி முஹம்மட் முஹம்மது அப்துல் காதருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 06, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 06, 2020
Rating:

கருத்துகள் இல்லை: