ஜனாஸா எரிப்பு விவகாரம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த தேவையில்லை என இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாஸா எரிப்பு விவகாரம்
ஊடகங்களில் பகிரங்கப் படுத்த தேவையில்லை என இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார். அதே வேளை ஜனாஸா எரிப்பு விவகாரம் சாதக பதில் கிடைக்குமென தான் நம்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நீதி அமைச்சர் அலி சப்ரியின் ஏற்பாட்டில் 24 புதன்கிழமை, நடைபெற்றது.
இந்தப் பேச்சின் போது, இலங்கை முஸ்லிம்களின் விவகாரம், ஜனாஸா எரிப்பு விவகாரம் என்பன முக்கிய இடத்தை பிடித்திருந்தன.
இதன்போது, ஜனாஸா விவகாரம் குறித்து தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் கதைத்தேன் அவர்களிடமிருந்து சாதக பதில் கிடைத்துள்ளது.
எனினும் இவ்விவ காரங்களை விலாவாரியாக, நாம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த தேவையில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் முழு இணக்கம்
வெளியிட்டுள்ளனர்.
ஜனாஸா எரிப்பு விவகாரம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த தேவையில்லை என இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 25, 2021
Rating:

கருத்துகள் இல்லை: