காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை ஜனாதிபதி பதக்கத்தினை வென்றது
சுற்றால் முன்னோடி ஜனாதிபதி பதக்க பரீட்சையில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் இருந்து ஐந்து மாணவிகள் சித்தியடைந்துள்ளார்கள்.
நடைபெற்ற ஜனாதிபதி பதக்கத்திற்கான நேர்முகப் பரீட்சையில் எமது கல்லூரி மாணவிகள் 05 பேர் சித்தியடைந்து ஜனாதிபதி பதக்கத்தினை வென்றுள்ளனர்.
இவர்களுக்கு கல்லூரி சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..
சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (21) முற்பகல் நடைபெற்றது.
கடந்த 06 வருட காலமாக அவர்கள் எடுத்து வந்த பல்வேறு செயற்திட்டங்கள், ஆராய்ச்சிகள், சமர்ப்பணங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் மூலம் இந்த இமாலய அடைவினைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் இந்த பதக்கத்தை பெறுவதற்கு மகரகம பயிற்சி பாசறைக்கு அழைத்துச்சென்ற சொப்னா Tr, இவர்களது project ஐ முற்று முழுதாக முடிப்பதற்கு சகல வழிகளிலும் உதவிய ராகினி Tr மற்றும் ரஜனி பாஸ்கரன் ( மத்திய சுற்றாடல் அதிகார சபை, பாடசாலைக்கு பொறுப்பானவர்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை சுற்றாடல் படையணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்
இப் பாடசாலை அதிபர் அவர்களுக்கும் பொறுப்பான ஆசிரியைகளுக்கும் எமது வலயம் சார்பான நன்றிகளையும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் பற்றிய அறிவுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்களை வழங்கி அவர்களைப் பாராட்டுவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சு இணைந்து, சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கின்றன.
இம்முறை 11ஆவது தடவையாக நடைபெற்ற சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவில், 192 சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து ஜனாதிபதி பதக்கங்களைப் பெற்றனர்.பாடசாலை மாணவர்களை சுற்றுச்சூழல் முன்னோடிகளாக பயிற்சி அளித்த ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
2025 சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவிற்காக தொகுக்கப்பட்ட சிறப்பு நினைவு மலரும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி, சுற்றாடல் மாசடைவதன் பாதகமான விளைவுகளை இன்று முழு உலகமும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
நமது இளமைக் காலத்தில் அனுபவிக்காத, மனித செயல்பாடுகளால் தற்போதைய தலைமுறை அனுபவிக்க வேண்டியுள்ள, சுற்றாடல் அழிவை மாற்றியமைத்து அனைத்து உயிரினங்களுக்கும் சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முதன்மையான கவனம் செலுத்தும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறிய அமைச்சர்,அதன் முக்கிய திட்டங்களில் ஒன்றான Clean Sri Lanka வேலைத் திட்டம் தற்போது வலுவாகசெயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இயற்கைக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான சமநிலையைப் பேணி மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் திட்டம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்கால சந்ததியினருக்கு இன்று வாழும் சூழலை விட ஆரோக்கியமான பசுமையான சூழலை விட்டுச் செல்லும் திட்டத்தில் வலுவான முன்னோடிகளாகச் செயல்படுமாறு பதக்கம் வென்ற அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி,கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர்.உடுவாவல, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், அதன் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி மூணமலே ஆகியோருடன் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
மட்/மம/ காத்தான்குடி மீரா பலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி.
காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை ஜனாதிபதி பதக்கத்தினை வென்றது
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 23, 2025
Rating:

கருத்துகள் இல்லை: