காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் - புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது
(எம்.ஐ.அப்துல் நஸார்)
காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (02) காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர் ஏ.எல்.டீன் பைரூஸ் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தின் பிரதம அதிதியாகவும் நிருவாகத் தெரிவின் கண்காணிப்பாளராகவும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) கலந்து கொண்டார்
இதன்போது, காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன், போரத்தின் ஆயுட்காலத் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) ஆகியோரது உரைகளும் மற்றும் சபையோரின் கருத்துரைகளும் இடம்பெற்றன,
இதனையடுத்து போரத்தின் ஆயுட்காலத் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) ஆகியோரது நெறிப்படுத்தலின் கீழ் நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.
தலைவராக எம்.எஸ்.எம்.நூர்தீன், செயலாளராக எம்.ஐ.அப்துல் நஸார், பொருளாளராக எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி, உப தலைவர்களாக எஸ்.ஏ.கே.பழீலுர்ரஹ்மான், எம்.எஸ்.எம்.சஜி, உப செயலாளராக ஏ.எல்.ஆதிப் அஹமட், தகவல் பணிப்பாளராக எம்.எஸ்.சஜித் அஹமட், ஊடக இணைப்பாளராக ஜே.எம்.பஹத், சமூக நலன்புரி பிரிவின் பணிப்பாளராக ஏ.எல்.டீன் பைரூஸ், கலை, இலக்கியப் பிரிவின் பணிப்பாளரான எம்.ரீ.எம்.யூனுஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு போரத்தின் நிருவாக சபை உறுப்பினர்களாக கபீர் எம் ஹஸன், மௌலவி என்.எம்.எம்.நௌபர் (பலாஹி), பீ.எம்.பயாஸ், ஏ.ரீ.எம்.றியாஸ், எம்.எம்.எம்.அஸீம், எம்.ஐ.அப்துல் மஜீட் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதியாக காத்தான்குடி மீடியா போரத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒற்றுமையின் அவசியம் தொடர்பான புதிய தலைவரின் உரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந் நிகழ்வில் போரத்தின் கடந்த வருட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை செயலாளரினாலும் கடந்த வருட கணக்கறிக்கை பொருளாளரினாலும் வாசிக்கப்பட்டு அவற்றின் பிரதிகள் உத்தியோகபூர்வமாக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) அவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் - புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2025
Rating:

கருத்துகள் இல்லை: