வைத்தியசாலைகளில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான தொடர்பாடல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை
நோயாளிகள், அவர்களது உறவினர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் எனப் பல தரப்பினருடனும் முதற் தொடர்பினை மேற் கொள்பவர்களான வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே காணப்படுகின்றனர்.
அந்தவகையில் அவர்களுக்கான தொடர்பாடல் திறன் விருத்தி முக்கியத்துவம் பெறுகின்றது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
Dr.ஆர்.முரளீஸ்வரன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான தொடர்பாடல் திறன் விருத்தி பயிற்சி பட்டறை பற்றி கருத்து தெரிவிக்குபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ச்சியாக சுகாதார நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தொடர்பாடல் திறன் விருத்திக்கான முன்னெடுப்புகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில், பயிற்சிப் பட்டறை ஒன்று (03.07.2025 வெள்ளிக்கிழைமையன்று) பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
"வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான வினைத்திறனான தொடர்பாடல்" எனும் தலைப்பில் தர முகாமைத்துவப் பொறுப்பு வைத்திய அதிகாரி
Dr.ஜெ.சகாய தர்ஷினி கருத்துரை வழங்கினார்.
அத்துடன், "நல்ல மனப்பாங்கினை எவ்வாறு உருவாக்குவது" என்பது குறித்து உளநல ஆற்றுப்படுத்துநர் திருமதி. நளினி நவரெட்ணராஜா தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
வைத்தியசாலைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சிறந்த தொடர்பாடல் திறன், அமைதியான, பாதுகாப்பான மற்றும் திறமையான ஓர் சூழலை உருவாக்க மிகவும் அவசியமானதாகும். இது மருத்துவப் பணியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்பட வேண்டும் என இக்கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது
வைத்தியசாலைகளில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான தொடர்பாடல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2025
Rating:

கருத்துகள் இல்லை: