Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சபாநாயகர் மற்றும் அவரின் தனிப்பட்ட பணியாட்தொதிக்குப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பான ஊடக அறிக்கை

 


பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலகம் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துகின்றது.

இதுவரை காணப்பட்டுவந்த எல்லையற்ற எரிபொருள் வசதிக்குப் பதிலாக தற்போதைய சபாநாயகர் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய, கபினட் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவை சபாநாயகருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு 2025 மே 02ஆம் திகதி, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இதற்கு அமைய தற்போதைய சபாநாயகருக்கு கபினட் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவான மாதமொன்றுக்கு 900 லீட்டர் வரை குறைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட PS/CSA/00/1/4/12 இலக்கத்தைக் கொண்ட 2025.01.21ஆம் திகதிய சுற்றுநிருபத்திற்கு அமைய சபாநாயகருக்குரிய உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டு (வாகன இலக்கம் CAN 8753/CBI 5198) அவரால் பயன்படுத்தப்படுவதுடன், சபாநாயகரின் ஊடகப் பிரிவின் பயன்பாட்டிற்காக NC 4923 என்ற இலக்கத்தைக் கொண்ட வான் வண்டி வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் தனிப்பட்ட பணியாட் தொகுதிக்காக இணைக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 08 என்பதுடன், சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர், இணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க சுற்றறிக்கைகளின் விதிகளின் படி உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் எரிபொருள் வசதிகள் உரித்தாகின்றன.

மேலும், பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவுக்காக பாராளுமன்றத்தின் ஏனைய நிறைவேற்று அதிகாரிகளுக்கு சமமாக சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் மாதாந்த சம்பளத்தில் உணவுக்காக நியமிக்கப்பட்ட தொகை அறவிடப்படுவதாகவும் பாராளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.

சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லம் அவரின் தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்லது கூட்டங்களுக்காகவோ அல்லது வேறு எந்தத் தேவைகளுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை என்பதுடன், சபாநாயகரின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் மற்றும் இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்கள் யாவும் பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் இடம்பெறுகின்றது.

அத்துடன், சபாநாயகர் தற்பொழுது தற்காலிகமாக வசித்துவரும் கொழும்பு 04, லொரிஸ் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கான மாதாந்த வாடகை 2007.04.20ஆம் திகதிய 22/2006 ஆம் இலக்க அரசாங்க நிர்வாக சுற்றிநிருபத்திற்கு அமைய அவரின் சம்பளத்திலிருந்து மாதாந்தம் செலுத்தப்படுவதாகவும் பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மற்றும் அவரின் தனிப்பட்ட பணியாட்தொதிக்குப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பான ஊடக அறிக்கை Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 07, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.