Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினைப் பாதுகாத்தல். சமூக விழிப்பூட்டல் பேரணி


(றாசிக் நபாயிஸ்,
ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் ஒன்றான வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினைப் பாதுகாத்து அக்கல்வி தொடர்பாக சமூக விழிப்பூட்டல் செய்யும் பேரணி அரச சார்பற்ற நிறுவனமான நவஜீவன நிறுவனத்தினால் சி.பி.எம்.நிறுவனத்தின் அணுசரனையுடன் இன்று (23) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் இடம் பெற்றது.


கல்முனை பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்யின் ஆலோசனைக்கு அமைய இடம் பெற்ற இந்நிகழ்வில், நவஜீவன நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.டி.பத்மகைலநாதன், வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.சவுந்தராஜன், பிரதேச செயலக
உதவி திட்டமிடல் பணிப்பாளர் ராஜகுல சேகரன், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜீவராஜ், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.அமலநாதன், சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஜ.முர்சீத், அபிவிருத்தி உத்தியோகத்தர் டில்லி மலர் சுபாஸ்கரன் மற்றும் 
பிரதேச மட்ட சுய உதவிக்குழுவின்
வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வின் வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் விநியோகிக்கப்பட்டதுடன், வலுவிழப்புடன் உள்ள சிறுவர்களின் கல்வியை மையப்படுத்திய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்  வீதியால் சென்ற வாகனங்களில் விழிப்பூட்டல் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டன.




வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினைப் பாதுகாத்தல். சமூக விழிப்பூட்டல் பேரணி Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 24, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.