முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய மீலாத் போட்டிகள்- 2021
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியாக வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் தேசிய மீலாத் போட்டி நிகழ்ச்சிகளை தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இவ்வருடம் (2021) நடாத்துவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கிராஅத், சிங்களப் பேச்சு, தமிழ் பேச்சு, ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள். திறந்த கவிதை போட்டி. அதான்போட்டி மற்றும் ''அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப் பிரபஞ்சதிற்கே ஓர் அருட்கொடையாவார்கள்' எனும் கருப்பொருளில் ஒரு காணொளி போட்டி நிகழ்ச்சியினையும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் தங்களது ஆக்கங்களை (கிராஅத், சிங்களப் பேச்சு, தமிழ் பேச்சு, ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள், திறந்த கவிதை போட்டி, அதான் போட்டி மற்றும் காணொளி போட்டி (Vidio Compertion) நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பப்படிவத்தினையும் அந்தந்தப் போட்டிகளுக்கான விதிமுறைகள், ஒவ்வொரு போட்டிகளுக்கான (Google link); உட்பட போட்டி பற்றிய முழுமையான விபரங்களையும் அறிந்து கொள்ள, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் Website:www.muslimaffairs.gov.lk என்ற இணைய முகவரி உடாக அல்லது DMRCASrilanka என்ற முகநூல் முகவரி ஊடாகவும் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
நிகழ்ச்சியினை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்து குறிப்பிட்ட நிகழ்நிலை (online) போட்டிகளுக்கான குறியீட்டு இலக்கங்கள் மற்றும் விண்ணப்பி;க்க வேண்டிய நிகழ்நிலை (online) முகவரியில் மாத்திரம் பதிவேற்றப்படல் வேண்டும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம்.எல்.எம் அன்வர் அலி தலைமையிலும் உதவிப்பணிப்பாளர் அலா அஹமத் வழிகாட்டிலிலும்; இடம்பெறவுள்ள இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதியாகும் எனவும் இறுதித் திகதிக்கு முன்னர் தங்களது ஆக்கங்களுக்குரிய போட்டிக்கான, கொடுக்கப்பட்டுள்ள (Google link); இல் பதிவேற்றம் செய்யுமாறும் நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எம். முப்தி முர்ஸி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) தெரிவித்தார்.
முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய மீலாத் போட்டிகள்- 2021
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 26, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 26, 2021
Rating:

கருத்துகள் இல்லை: