சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 'இணையவழி இலத்திரனியல் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையின் (ETA)’' மூலம் சுற்றுலா வீசா விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 'இலங்கை சுற்றுலா கைத்தொலைபேசி செயலி (Mobile App)’ இனைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் சுற்றுலா வீசா அனுமதிப்
பத்திரத்தை வழங்குவதற்காக 2021.01.04 அன்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அதற்கமைய, கீழ்வரும் வகையில் வீசா கட்டணங்களை அறவிட்டு குறித்த சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
*சார்க் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு –70 அமெரிக்க டொலர்கள்.
*சார்க் அல்லாத நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு –85 அமெரிக்க டொலர்கள்.
*சிங்கப்பூர், மாலைதீவு, சீசெல்ஸ் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு – 50 அமெரிக்க டொலர்கள் (குறித்த நாடுகளுடன் தற்போதுள்ள இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு
அமைய).
சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 24, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 24, 2021
Rating:

கருத்துகள் இல்லை: