ஐ எஸ் சிந்தனை என்றால் என்ன...?
இது பற்றி யாரும் தெளிவாக பேசுவதை காணவில்லை.
ஐ எஸ் என்றால் என்ன?
இஸ்லாமிய நாடு என்பது பொருள்.
1. ஐ எஸ் சிந்தனை என்றால் இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதற்காக போராடுதல் என்கிறார்கள் சிலர்.
2. ஐ எஸ் சொர்க்கத்தில் கிடைக்கும் கண்ணிகளுக்காக முஸ்லிம் அல்லாதாரை கொல்லுதல் என்கின்றனர் இன்னும் சிலர்.
எல்லாமே குருடன் பார்த்த யானையின் கதையாகத்தான் உள்ளது.
ஐ எஸ் என்ற பெயரே அறிமுகமானது சில வருடங்களுக்கு முன்புதான். அதுவும் அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றி சத்தாமைக்கொன்றதன் பின்புதான்.
அதற்கு முன் ஐ எஸ் என்ற வார்த்தையை உலகம் கேட்டதுமில்லை, கண்ணிகளுக்கு ஆசைப்பட்டு முஸ்லிம் அல்லாத அப்பாவி மக்களை யாரும் கொன்றதாக நாம் அறியவுமில்லை.
சில வருடங்களுக்கு முன் சில ஆயுதம் தாங்கிய அரபிகள் சிரியாவின் சில பகுதிகளையும் ஈராக்கின் சில பகுதிகளையும் பிடித்துக்கொண்டு அதனை ஐ எஸ் Islamic State என்றனர்.
அதன் பின் அவர்கள் என்ன செய்தனர்?
முஸ்லிம் அல்லாதவர்களை கொன்றார்களா?
இல்லை, முஸ்லிம்களைத்தான் கொன்றார்கள்.
முஸ்லிம் அல்லாத நாட்டுக்குள் படை எடுத்தனரா?
இல்லை.
அப்படியாயின் அருகில் இருந்த மிகப்பெரிய எதிரி நாடான இஸ்ரேலுக்குள் புகுந்திருப்பார்கள். அப்படி நடக்கவில்லை.
மாறாக சவூதிக்குள், கத்தாருக்குள் ஊடுருவி தாக்குதலுக்கு முயற்சித்தனர்.
இதனால் முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவால் ஐ எஸ் ஒழிக்கப்பட்டது.
ஆகவே ஐ எஸ் சிந்தனை என்றால் முஸ்லிம் நாடுகளை பிடித்து அவற்றை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனைதான் இது என்பது மேற்படி நிகழ்வுகள் மூலம் அறிகிறோம்.
அத்தகைய ஐ எஸ் சிந்தனையை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. முஸ்லிமான அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குவது கூடாது என நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள்.
ஆட்சியாளர்களின் தவறுகளை கண்டால் அவற்றை சுட்டிக்காட்டி உபதேசம் செய்ய வேண்டுமே தவிர ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தூக்க இஸ்லாத்தில் இடமில்லை.
இஸ்லாம் இந்தோனேசியா வரை பரவியது ஆயுதத்தால் அல்ல. மலேசியா, இந்தோனேசியா, சீனாவுக்கெல்லாம் முஸ்லிம்கள் ஆயுத படை சென்றதில்லை.
மாறாக நல்ல பண்புகளாலும், உண்மையான, நேர்மையான செயல்களாலுமே இஸ்லாம் பரவியது.
ஆகவே அப்பாவிகளை கொன்று இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ஐ எஸ் சிந்தனை என்பது பிழையான சிந்தனையாகும்.
அதே வேளை சொர்க்கத்து கண்ணிகளுக்காக முஸ்லிம் அல்லாதவரை கொலை செய்தல்தான் ஐ எஸ் சிந்தனை என சொல்வதும் பிழையானது.
- முபாறக் ஏ மஜீத்
ஐ எஸ் சிந்தனை என்றால் என்ன...?
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 03, 2021
Rating:

கருத்துகள் இல்லை: