Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி முன்னாள் காழிநீதிபதி உமர்லெப்பை ஐக்கிய தேசிய கட்சியின் வலய அமைப்பாளராக நியமனம்.


காத்தான்குடி முன்னாள் காழி நீதிபதி உமர்லெப்பை 
ஐக்கிய தேசியக் கட்சியின் வலய அமைப்பாளராக நியமனம்.

ஐக்கிய தேசிய கட்சியானது தேசிய ரீதியில் கட்சியை கட்டியெலுப்பும் முகமாக கிராமங்கள் தோறும் வலய அமைப்பாளர்களை நியமித்து அதனூடாக மக்கள் ஆணையைப் பெறும் நோக்கில் இவ்வாரான வலய அமைப்பாளர்கள் நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் எமது LVM ஊடகப் பிரிவுக்கு தெரிவித்தார்.

அந்தவகையில் காத்தான்குடி 10 வட்டாரங்கள் என்றதன் அடிப்படையில் 
காத்தான்குடியை 03 வலயங்களாக பிரித்து  மூவர் 
வலய அமைப்பாளர்களாக 
நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .

வலயம் ஒன்று.
==============
1,2,6-வட்டாரங்களான பதுரியா,அல்அக்சா, 
மௌலானா.ஆகிய 03 வட்டாரங்களுக்கான வலய அமைப்பாளராக முன்னாள் காழி நீதிபதி, ஓய்வு பெற்ற கிராம உத்தியோகஸ்தர் M.S.உமர்லெப்பை நியமிக்கப்பட்டுள்ளார். 


வலயம் இரண்டு-
================
3,4,5- வட்டாரங்களான, 
அன்வர்,நூறானியா, தாறுஸ்ஸலாம் ஆகிய வட்டாரங்களுக்கான வலய அமைப்பாளராக சமூக செயற் பாட்டாளர்.S.A.M.முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.

வலயம் மூன்று-
==============
7,8,9,10 வட்டாரங்களான, 
ஹசனாத், ஜாமியுழ்ழாபிரீன், ஹிழுறியா,மீராபள்ளி. ஆகிய வட்டாரங்களுக்கான வலய அமைப்பாளராக.M.S.M.சாபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர்  சிவலிங்கம் சுதர்சன் தெரிவித்தார்.


அதேபோன்று பாலமுனை, காங்கேயனோடை  தொகுதி அமைப்பாளராக AT.அஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இவர்கள் தங்கள் வட்டாரங்களில் கட்சியின் செயற்திட்டங்களை முன் கொண்டு செயற்படுவர் என்றும் அவ்வாறே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த  (21)ம் திகதி கட்சியின் பொதுச் செயலாளா் பாலித ரங்கேபண்டார தலைமையில் மட்டக்களப்பில் இடம் பெற்ற  நிகழ்வொன்ரின் போது இந்நியமனம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ஏ.எல்.டீன் பைரூஸ்) 
காத்தான்குடி முன்னாள் காழிநீதிபதி உமர்லெப்பை ஐக்கிய தேசிய கட்சியின் வலய அமைப்பாளராக நியமனம். Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 30, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.