வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் இர்பான் மொஹமட் விருது பெற்று கெளரவிக்கப்பட்டார்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயம் வென்ற வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் இர்பான் மொஹமட் 2023ஆம் ஆண்டின் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான Kingdom of Raigam விருதினை பெற்றுக் கொண்டார் .
கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் (30) இரவு நடைபெற்ற 20 ஆவது ரைகம் டெலிஸ் விருது வழங்கும் விழா மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடாகியிருந்தது. நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார்.
ஒவ்வொரு வருடமும் இவரை அரச மற்றும் தனியார் விருதுகள் விட்டு வைப்பதில்லை. இலங்கை தமிழ் தொலைக்காட்சி Super Star ஆக வலம் வரும் இவர் ஒரே ஆண்டில் ஒரே மேடையில் ஒரே தடவையில் 4 அரச ஊடக விருதுகளை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்தவர்.
இலங்கையில் இவர் மாத்திரம் தான் ஒரே மேடையில் 4 அரச ஊடக விருதுகள் பெற்று சரித்திரம் எழுதிய தொலைக்காட்சி நாயகன்.
விருதுகள் அவரது தலையில் செருக்கேற்றுவதில்லை.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
MJM.SHUKRY
#TamilNews #vijaytv #TamilnaduNews #SriLanka #awards #raigam #television #presenter #history
வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் இர்பான் மொஹமட் விருது பெற்று கெளரவிக்கப்பட்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 01, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 01, 2024
Rating:

கருத்துகள் இல்லை: