ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக தலைவராக நிமல் சிறிபால நியமிக்கப்பட்டுள்ளார்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் (08) முற்பகல் ஸ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு ஏப்ரல் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் (ஏப்ரல் 08) காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக தலைவராக நிமல் சிறிபால நியமிக்கப்பட்டுள்ளார்...
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 09, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 09, 2024
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: