பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தாருஸ்ஸலாம் மைதான வீதி பூநொச்சிமுனை என்ற முகவரியில் வசித்துவரும் ஜே.சலீம் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 03ம் திகதி ஆழ் கடலில் மூழ்கி (Diving) தொழில் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட உயர் அமுக்கம் காரணமாக இரு கால்களும் செயலிழந்து தற்போது ஆரம்பகட்ட சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றார்.
எனினும் இவரை பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் இவருக்கு மேலதிக சிகிச்சை செய்து நோயின் தற்போதய நிலையை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டுமானால் உடடியாக (MRI scan) (எம்ஆர்ஐ) ஸ்கேன் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.
இருந்தபோதிலும் இவருடைய குடும்ப வறுமை நிலைமை காரணமாக இவரால் (எம்ஆர்ஐ) ஸ்கேன் செய்வதற்கோ, சக்கர நாற்காலி வாங்குவதற்கோ போதியளவு பணம் இல்லை.
இவருடைய பராமரிப்பில் இவரை தவிர்ந்து இவருடைய மனைவியும் மூன்று பிள்ளைகளும் காணப்படுகின்றனர்.
எனவே கடந்த 40 தினங்களாக தொழில் செய்யாமல் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் தனக்கு தன்னுடைய வைத்திய நிலைமைகளையும் குடும்ப நிலைமைகளையும் கருத்தில் கொண்டு MRI scan செய்வதற்கும் Wheel Chair வாங்குவதற்கும் தேவையான உதவிகளை தனவந்தர்கள்,வசதிபடைத்தவர்கள் தந்துதவுமாறு குறித்த சகோதரர் வேண்டிக் கொள்கிறார்.
குறித்த நபருக்கு உதவி வழங்குபவர்கள் J.SALEEM A/C: 8022215020 COMMERCIAL BANK, KATTANKUDY BRANCH
என்ற வங்கி கணக்கிலக்கத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
(J.SALEEM -0719197071)
கருத்துகள் இல்லை: