Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இடம்பெறுகின்ற கைதுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் பிர்தௌஸ் நளீமி. .


தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்புகளுக்கான அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி.

இலங்கையின் இனப்பிரச்சினையினை மிக மோசமாக கூர்மைப்படுத்திய சட்டங்களில் ஒன்றே பயங்கரவாத தடைச்சட்டமாகும்.

இச்சட்டத்தினைப் பயன்படுத்தி கடந்த கால ஆட்சியாளர்கள் பல்வேறு அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் என்ற போர்வையில் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் அல்லது அரசாங்கங்களின் பிழைகளை, ஜனநாயக விரோத செயற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தியவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் அனைவரும் இச்சட்டத்திற்கூடாக இலக்குவைக்கப்பட்டனர்.

அப்போதெல்லாம் இப்பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனக் குரல் கொடுத்த ஒரு தரப்பாக தற்போதைய ஆளுந்தரப்பான தேசியமக்கள் சக்தி முன்னனியில் இருந்தது. ஆனால் தங்களது கைகளுக்கு அதிகாரம் கிடைத்தபின்னரும் அதனைத் தொடர்வதானது என்னைப் போன்றவர்களை பெரிதும் ஏமாற்றத்திற்குள்ளாக்கி உள்ளது.

எனவேதான் இப்பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இடம்பெறுகின்ற கைதுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நான் ஆதரித்த ஒரு கட்சி என்பதற்காக தேசிய மக்கள் சக்தி விடுகின்ற தவறுகளை அல்லது வாக்குறுதி மீறல்களை நியாயப்படுத்தவே முடியாது

அது அறம் சார் அரசியலாகவும் அமையாது.

அவ்வாறே கடந்த 05.04.2025 சனிக்கிழமை அன்று காத்தான்குடி தேசிய மக்கள் சக்தி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சகோதரர் மர்சூக் அகமட்லெப்பை தெரிவித்த கருத்துக்களோடு நான் உடன்படவில்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்வதோடு ஜனநாயக ரீதியாக சகோதரர் மர்சூக் அகமட்லெப்பை அவர்களுக்கு இருக்கும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தினடிப்படையில் அது அவரது தனிப்பட்ட கருத்துரிமையாகும் என்பதனையும் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

அத்தோடு சர்வதேச அரசியல் சூழமைவுகள், பிராந்திய அரசியல் சூழமைவுகள், தேசிய அரசியல் சூழமைவுகள் என்பவை குறித்தான மிக நுன்புலத்திலான பார்வையும் தெளிவும் இன்றி இலங்கை முஸ்லிம் அரசியலினை முன்கொண்டுசெல்லமுடியாது எனவேதான் இலங்கைமுஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் என்பது மிக அறிவுபூர்வமான தீர்மானங்களால் முன்னகர்த்தப்படவேண்டுமே ஒழிய உணர்ச்சிகளாலும், தனிப்பட்ட, அல்லது கட்சிசார் அரசியல் நலன்களாலும் அல்ல என்பதனையும் தெரிவித்துக்கொள்வதோடு சமூக,தேச நலன் சார்ந்த எந்தத்தீர்மானத்தினை மேற்கொள்ளவும் எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இடம்பெறுகின்ற கைதுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் பிர்தௌஸ் நளீமி. . Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 08, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.