காத்தான்குடி ஜெம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஹாரூன் (ரஷாதி) மீண்டும் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார் .
காத்தான்குடி ஜெம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஹாரூன் (ரஷாதி) விடுமுறையின் பின்னர் மீண்டும் தனது கடமையினைப் பொறுப் பேற்றுக் கொண்டார்.
மௌலவி AM.ஹாரூன் (ரஷாதி) அவர்கள் வெளிநாட்டு ஜமாஅத் செல்வதற்காக ஒரு வருடகாலம் விடுமுறையில் சென்றிருந்தார் .
கடந்த வருடம் வெளிநாடு சென்ற அவர் தற்போது நாடு திரும்பியுள்ளார்.
மௌலவி AM.ஹாரூன் (ரஷாதி) அவர்களின் விடுமுறை காலப் பகுதியில் தற்காலிக தலைவராக காத்தான்குடி மூத்த உலமாக்களில் ஒருவரான மௌலவி எம்.ஜ.அப்துல் கபூர் (மதனி) அவர்கள் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.
காத்தான்குடி ஜெம்இய்யத்துல் உலமா சபையின் தலைவராக மௌலவி AM.ஹாரூன் (ரஷாதி) மீண்டும் செயற்பட்டு வருவதாக காத்தான்குடி ஜெம்இய்யாவின் உலமா ஒருவர் எமது ஊடகப் பிரிவிடம் தெரிவித்தார்.
காத்தான்குடி ஜெம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஹாரூன் (ரஷாதி) மீண்டும் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார் .
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 05, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: