மக்களின் மனதில் நீங்காத இடத்தை தொடப்போகும் 2026 பட்ஜட்: மக்களுக்கு நிவாரணம் பொருத்திருந்து பார்ப்போம்...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2026 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த வரவு- செலவுத் திட்டம் எவ்வாறு அமையும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது நேற்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,“வரி அதிகரிப்பு இடம்பெறாது என்பதை ஜனாதிபதி அறிவித்துவிட்டார்.
இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். அது எவ்வாறு இடம்பெறும் என்பது பற்றி ஜனாதிபதி தமது உரையில் தெளிவுபடுத்துவார். உற்பத்தி பொருளாதாரம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: