Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆதம்பாவா எம்.பியின் முயற்சியினால் சம்மாந்துறை இ.போ.ச (CTB) டிப்போ மீண்டும் அம்மக்களுக்கு கையளிப்பு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கடந்த தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார மேடைகளில் முதன்மையாகப் பேசப்பட்ட சம்மாந்துறை CTB பஸ் டிப்போ பிரச்சினையானது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக சம்மாந்துறை மக்களிடம் (03) நேற்று முன்தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகக்  கையளிக்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக பாராளுமன்ற உறுப்பினரின் பங்குபற்றலுடன் ஊர் பொதுமக்களும் சேர்ந்து அதனை எதிர்கால நடவடிக்கைக்காக தயார் நிலைக்குக் கொண்டு வந்தனர்‌.



இதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் விமல் ரத்னாயக்க, அபிவிருத்தி கிராமியப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய பிரதான முகாமையாளர்(CRM) ஆகியோருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.



இந்நிகழ்வின் போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.பி. நவாஸ் உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், போக்குவரத்து சபையின் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  



ஆதம்பாவா எம்.பியின் முயற்சியினால் சம்மாந்துறை இ.போ.ச (CTB) டிப்போ மீண்டும் அம்மக்களுக்கு கையளிப்பு Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 04, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.